உயிரியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை துரத்திய புலி! வைரலாகும் வீடியோ!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மதோப்பூர் தேசிய உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு முக்கிய விலங்காக புலிகள் பாதுகாக்கப்படுகின்றன.

உயிரியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை துரத்திய புலி! வைரலாகும் வீடியோ!!

உயிரியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை புலி ஒன்று துரத்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மதோப்பூர் தேசிய உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு முக்கிய விலங்காக புலிகள் பாதுகாக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், புலியை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் ஜீப்பில் வந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் சிறிதுநேரம் பொறுமைகாத்த புலி, பின்னர் அவர்களை துரத்தத் தொடங்கியது. 
 
:

இதையடுத்து, ஜீப்பை வேகமாக இயக்கி சுற்றுலாப் பயணிகள் புலியிடமிருந்து தப்பிச் சென்றனர். 
:

அந்த இடத்தில் ஜீப் செயல்படாமல் இருந்திருந்தால், நிலைமை விபரீதம் அடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளை புலி துரத்தும் 19 வினாடி வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

More News