This Article is From Oct 23, 2019

டெல்டா, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு - Tamilnadu Weatherman கணிப்பு!

Tamilnadu Weatherman Update - "சென்னையைப் பொறுத்தவரை இன்று அவ்வளவாக மழை இருக்காது. நாளை இரவு சென்னையில் மழை கொட்டித் தீர்க்க அதிக வாய்ப்புள்ளது"

டெல்டா, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு - Tamilnadu Weatherman கணிப்பு!

Tamilnadu Weatherman Update - "நாளை இந்த தாழ்வுநிலை காரணமாக ராமநாதபுரம், டெல்டா மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்."

Tamilnadu Weatherman Update - வடகிழக்கு பருவமழை (NEM) காரணமாக நாளை டெல்டா (Delta), கன்னியாகுமரி (Kanyakumari) மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என்று பிரபல வானிலை கணிப்பாளர், பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், “காற்றழுத்த தாழ்வுநிலை, தெற்கு ஆந்திராவுக்கும் சென்னை கடற்கரைக்கு அருகில் நகர்ந்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் தமிழகத்தில் விட்டுவிட்டுத்தான் மழை பெய்யும். 

நாளை இந்த தாழ்வுநிலை காரணமாக ராமநாதபுரம், டெல்டா மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். கர்நாடக கடற்கரையோரம் மற்றும் கேரளாவிலும் நாளை கனமழை பெய்யும். தமிழகத்திலும் பரவலாக நாளை நல்ல மழை பெய்யும். 

சென்னையைப் பொறுத்தவரை இன்று அவ்வளவாக மழை இருக்காது. நாளை இரவு சென்னையில் மழை கொட்டித் தீர்க்க அதிக வாய்ப்புள்ளது,” என்று தகவல் தெரிவித்துள்ளார். 
 

.