This Article is From Mar 04, 2020

“மு.க.ஸ்டாலின் என்னை காப்பியடிச்சிட்டாரு!”- ராமதாஸ் கொதிப்பின் பின்னணி என்ன..?

“தமிழக ஆலயங்களை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்துவது குறித்து காலை 10.54 மணிக்கு நான் வெளியிட்ட அறிக்கைக்கு 4 வரி செய்தி"

“மு.க.ஸ்டாலின் என்னை காப்பியடிச்சிட்டாரு!”- ராமதாஸ் கொதிப்பின் பின்னணி என்ன..?

"அதை காப்பியடித்து மாலை 5.20 மணிக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த அறிக்கைக்கு 4 பத்தி செய்தி."

ஹைலைட்ஸ்

  • கோயில்களை தொல்லியல் துறைக்குகீழ் கொண்டுவருவது பற்றி மத்திய அரசு அறிவிப்பு
  • அதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
  • ஸ்டாலினும் ராமதாஸும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

தமிழகத்தில் உள்ள கோயில்களையும் நினைவுச் சின்னங்களையும் மத்திய தொல்லியல் துறைக்குக் கீழ் மாற்ற ஏற்பாடு நடந்து வருவதாக திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆளுங்கட்சியான அதிமுக - பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவும், மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக கொந்தளித்துள்ளது. பாமகவின் நிறுவனர் ராமதாஸ், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதைப் போலவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், ‘மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறு ஆய்வு செய்யப் போகிறோம்” என மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு பிரகலாத் சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், திருக்கோயில்களையும் மத்திய தொல்லியல் துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் கைப்பற்ற நினைக்கும் கபட எண்ணத்தை மனதிலிருந்து மத்திய கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் உணர்வை மீறி - மாநில உரிமையை நசுக்கும் விதமாக, திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை - கலாச்சாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால் - அதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்,' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு ராமதாஸ், “தமிழக ஆலயங்களை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்துவது குறித்து காலை 10.54 மணிக்கு நான் வெளியிட்ட அறிக்கைக்கு 4 வரி செய்தி. அதை காப்பியடித்து மாலை 5.20 மணிக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த அறிக்கைக்கு 4 பத்தி செய்தி. சில ஊடகங்களை தவிர மற்றவற்றில் இது தான் நிலைமை. இது தான் ஊடக அறமா?” என கொந்தளித்துள்ளார். 


 

.