This Article is From Jan 18, 2019

சிபிஐ சிறப்பு இயக்குனர் பொறுப்பிலிருந்து ராகேஷ் அஸ்தனா நீக்கம்

புதிய இயக்குனரை தேர்வு செய்யும் வகையில், சிபிஐ-யில் இருக்கும் முக்கிய அதிகாரிகள் சிலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஐ சிறப்பு இயக்குனர் பொறுப்பிலிருந்து ராகேஷ் அஸ்தனா நீக்கம்

சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மாவுடன் ஏற்பட்ட மோதலால் ராகேஷ் அஸ்தனா கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.

ஹைலைட்ஸ்

  • நம்பர் 2 பொறுப்பில் இருந்த ராகேஷ் அஸ்தனா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
  • கடந்த வாரம் சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா இடமாற்றம்
  • மேலும் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
New Delhi:

சிபிஐ சிறப்பு இயக்குனர் பொறுப்பில் இருந்து ராகேஷ்ஸ் அஸ்தனா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த அலோக் வர்மா கடந்த வாரம் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அஸ்தனாவின் பதவி பறிப்பு நடந்துள்ளது.

சிபிஐக்குள் நடந்த அதிகார மோதலை தொடர்ந்து இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இடைக்கால சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார். இதில் சிபிஐ இயக்குனராக தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இருப்பினும் மோடி தலைமையிலான குழு கூடி அலோக் வர்மாவை கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்தது.

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி, பிரதமா மோடி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புக்குழு அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுத்தது. 

சிபிஐ இயக்குனராக இருந்த அவர், தீயணைப்பு துறை தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதன்பின்னர் அந்த பொறுப்பை ஏற்க மறுத்து தனது பதவியை அலோக் வர்மா ராஜினாமா செய்தார்.

இருப்பினும், ராகேஷ் அஸ்தனா விவகாரத்தில் சிபிஐ எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. இந்த நிலையில் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று புதிய இயக்குனரை நியமிக்க ஏதுவாக அலோக் வர்மாவின் டீமில் இருந்தவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 24-ம்தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பு தேர்வுக்கு கூடுகிறது. இதில் சிபிஐயின் புதிய இயக்குனர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

.