மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு!!

இதனால், தமிழகத்தில் இருந்து 6 வேட்பாளர்களும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்புள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு!!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் மொத்தமுள்ள 18 உறுப்பினர்களில் 6 பேரின் பதவி காலம் இம்மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்காக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக, தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

அதன்படி, திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதேபோல், மக்களவை தேர்தலின் போது, ஏற்கனவே செய்துகொண்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி, மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.

இதேபோல் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான் மற்றும் மேட்டூர் நகர செயலாளர் எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மக்களவை தேர்தலின் போது, ஏற்கனவே செய்துகொண்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி, பாமக சார்பில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.

இதனிடையே வைகோவுக்கு தேச துரோக வழக்கில் 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் நிற்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்பட்டது. ஒருவேளை வைகோ மனு நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதில் ஒருவரை நிறுத்த திமுக முடிவெடுத்தது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்.ஆர்.இளங்கோ திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, நேற்று வேட்புமனு பரிசீலனையில் வைகோ உட்பட 7 பேரின் மனுவையும் ஏற்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ வேட்புமனுவை திரும்பப் பெறுகிறாரா அல்லது அன்புமணி ராமதாஸூக்கு போட்டியாக தொடர்ந்து, திமுக-வால் போட்டியட வைக்கப்படுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ இன்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதைத்தொடர்ந்து, வைகோ உள்ளிட்ட 6 பேரும் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................