அமித்ஷாவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அமளி: தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு நிறுத்தம்!

அசாமியின் நலன்களை அரசு பாதுகாக்கும் என்று அமித் ஷா கூறிய கருத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து, அவையில் அமித் ஷா பேசத் துவங்கியதும், மீண்டும் ஒளிப்பரப்பு துவங்கியது. 

New Delhi:

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அமித்ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு நிறுத்தம் செய்யப்பட்டது. 

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இஸ்லாமியர்கள் அல்லாத புலம்பெயர்ந்தோரை இந்திய குடிமக்களாக மாற்ற உதவும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதாவை அமித் ஷா இன்று அவையில் அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, அவையில் கடும் அமளி ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, ​​மேல்சபையின் தலைவரான துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடுவின் உத்தரவின் பேரில் பிற்பகலில் மாநிலங்களவையின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

அசாமியின் நலன்களை அரசு பாதுகாக்கும் என்று அமித் ஷா கூறிய கருத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரிபூன் போரா அமித் ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார். 

தொடர்ந்து, சபாநாயகர் வெங்கய்யா நாயுடு அவையில் இடையூறு ஏற்படுத்துவதாக எதிர்கட்சி உறுப்பினர்களை எச்சரித்தார். மேலும் இடையூறு அளிப்பவர்களை அன்றைய தினம் அவையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார். 

பின்னர், மாநிலங்களவையின் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டது 

இதுதொடர்பாக தகவல்கள் கூறும்போது, சபாநாயகர் ஒரு பொத்தானை அழுத்தினால் போதும் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்படும் என்கின்றனர். தொடர்ந்து, அவையில் அமித் ஷா பேசத் துவங்கியதும், மீண்டும் ஒளிப்பரப்பு துவங்கியது. 

முன்னதாக, குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

More News