சீறும் எடப்பாடி பழனிசாமி… 3 வார்த்தையில் Rajini கொடுத்த ரிப்ளை!

Rajini responds to Edappadi - “அரசியல் களத்தில் நல்ல தலைவருக்கு வெற்றிடம் இருப்பதாக சொல்லப்படுகிறதே..?”

சீறும் எடப்பாடி பழனிசாமி… 3 வார்த்தையில் Rajini கொடுத்த ரிப்ளை!

Rajini responds to Edappadi - “தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிடம் இல்லை என்பதை அதிமுக நிரூபித்துள்ளது"- எடப்பாடி பழனிசாமி

Rajini responds to Edappadi - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), இன்று கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்துப் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ரஜினி (Rajini) கூறிய கருத்திற்கு கேலியாக சிரித்தபடியே பதிலடி கொடுத்தார். தற்போது, எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு ரியாக்ட் செய்துள்ளார் ரஜினி. 

முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில், “தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்லப்படும் கருத்து பற்றி…” என்று நிருபர் ஒருவர் கேட்டபோது, 

“தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிடம் இல்லை என்பதை அதிமுக நிரூபித்துள்ளது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தல் வெற்றியால் தமிழகத்தில் வெற்றிடம், காலி இடம் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது,” என்றார் தீர்க்கமாக.

3brt23mo

“அரசியல் களத்தில் நல்ல தலைவருக்கு வெற்றிடம் இருப்பதாக சொல்லப்படுகிறதே..?”, என்றதற்கு, “யார் சொன்னார்?,” என பதில் கேள்வி கேட்டார் எடப்பாடி. “ரஜினிதான் சொன்னார்,” என்றதற்கு.

“ஓ… அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவரா..? கட்சி தொடங்கி நடத்தி வருகிறாரா..? அவர் ஒரு நடிகர். அவர் சொல்லும் கருத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி செய்தியாக்குகிறீர்கள். அது குறித்து என்னிடமும் கேட்டு பரபரப்பாக்கப் பார்க்கிறீர்கள்,” என்று சிரத்தபடியே கேலியாக பதில் அளித்தார் முதல்வர். 

எடப்பாடியாரின் இந்த சீற்றமான கருத்து பற்றி ரஜினியிடம் கேட்டபோது, “கருத்து சொல்ல விரும்பலை…” என்று முடித்துக் கொண்டார். 
 

More News