‘பேட்ட’ படத்தின் டிரெய்லர்..! #Get Rajinified

‘2.0’ திரைப்படத்தைத் தொடர்ந்து, வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’

‘பேட்ட’ படத்தின் டிரெய்லர்..! #Get Rajinified

இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்

New Delhi:

‘2.0' திரைப்படத்தைத் தொடர்ந்து, வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட'. இந்தப் படத்தின் ‘மரண மாஸ்' டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், இயக்குநர்கள் சசிகுமார் - மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 

பேட்ட டிரெய்லரை இங்கே பாருங்கள்:

சமீபத்தில், வெளியிடப்பட்ட ‘பேட்ட'-யின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தைப் பார்த்த சென்சார் குழு ‘யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. படத்தை வருகிற ஜனவரி 10-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.