‘ரஜினி, நானா படேகருடன் நடிக்க கூடாது!’- நடிகை தனுஸ்ரீ தத்தாவின் பகீர் குற்றச்சாட்டு

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, ஒரு அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘ரஜினி, நானா படேகருடன் நடிக்க கூடாது!’- நடிகை தனுஸ்ரீ தத்தாவின் பகீர் குற்றச்சாட்டு

10 ஆண்டுகள் முன்னர் நானா படேகர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார், தனுஸ்ரீ தத்தா


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. 2009-ல் நானா படேகர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார், தனுஸ்ரீ
  2. அந்த சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரிந்தும் அமைதி காத்தனர், தனுஸ்ரீ
  3. 2005-ல் அறிமுகமானவர் தனுஸ்ரீ தத்தா

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, ஒரு அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நடிகர் நானா படேகர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் எனவும், அது பலருக்குத் தெரிந்தும் அமைதி காத்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய தனுஸ்ரீ, ‘நானா படேகர் குறித்து திரைப்படத் துறையில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அவர் பெண்கள் குறித்து எப்படிப்பட்ட எண்ணத்தை வைத்திருக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும். அவரின் பின்புலம் குறித்தும் தெரியும்… 

அவர் எப்படி நடிகைகளை தாக்கியுள்ளார், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார், பெண்களுடன் எவ்வளவு தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார் போன்ற விஷயங்கள் பலருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், அது எதுவும் ஊடகங்களில் வருவதில்லை’ என்று விவரித்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் குறித்து தனுஸ்ரீ, ‘நானா படேகர், 10 ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி பலருக்குத் தெரியும். அது குறித்து நிறைய பேசப்பட்டாலும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைப் போன்ற விஷயங்கள் குறித்து பேசாமல், இங்கு எந்த மாற்றமும் சாத்தியமில்லை’ என்று விளக்கினார். 

தொடர்ந்து அவர், ‘அக்‌ஷய் குமார், ரஜினிகாந்த் போன்ற உச்சபட்ச நடிகர்கள் நானா படேகருடன் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் தொடர்ந்து படேகர் போன்ற ஆட்களுடன் நடிப்பதால் எந்த மாற்றமும் நடக்க வாய்ப்பில்லாமல் போகும்’ என்று தெரிவித்துள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................