"இன்டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்" - வயது வெறும் எண் என்று நிரூபித்த ரஜினி : ட்விட்டரில் குவியும் பாராட்டு

படப்பிடிப்பின்போது முற்கள் குத்தியதால் சிறு சிறு கீறல்கள் ஏற்பட்டதாக கூறினார்

காட்டிலும் சூப்பர் ஸ்டார் அசத்தலாக இருக்கிறார் என்றும் கூறினர்

ஹைலைட்ஸ்

  • காட்டிலும் சூப்பர் ஸ்டார் அசத்தலாக இருக்கிறார் என்றும் கூறினர்
  • மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "இன்டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்"
  • இருவரும் பந்திப்பூர் தேசிய பூங்காவின் வனப்பகுதியில் வலம்வந்தனர்
New Delhi:

கடந்த சில நாட்களாகவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "இன்டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்" நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கலந்துகொண்ட அந்த தொடர் நேற்று ஒளிபரப்பானது. ஏறத்தாழ 40 ஆண்டுகளாக திரையுலகில் வலம்வரும் ரஜினி தொலைக்காட்சி தொடர் ஒன்றில் தோன்ற #ThalaivaonDiscovery மற்றும் #Rajinikanth என்ற ஹாஷ் டேக்கள் கடந்த திங்கள் அன்று ட்விட்டர் தளத்தில் வைரலானது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் பியர் கிரில்ஸ் ஆகிய இருவரும் பந்திப்பூர் தேசிய பூங்காவின் வனப்பகுதியில் வலம்வந்தனர். இந்த நிகழ்வின்போது நடிகர் ரஜினி ஒரு பழுதடைந்த இரும்பு பாலத்தை கடந்தது மட்டும் இல்லாமல் ஒரு நீர்நிலையையும் கடந்து சென்றார்.

இதுவரை யாரும் பார்த்திராத ரஜினிகாந்தின் இந்த தோற்றமும் அவர் செய்த அந்த சாகசங்களும் "வயது என்பது வெறும் எண்" என்ற கூற்றை நிரூபித்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சிகளை பார்த்து பலர் 'தலைவா நீங்கள் அழகான உள்ளம் படைத்தவர் என்றும், காட்டிலும் சூப்பர் ஸ்டார் அசத்தலாக இருக்கிறார் என்றும் கூறினர். அவர் செய்தது பெரிய அளவிலான சாகசங்கள் இல்லை என்றபோது, 70 வயதில் ரஜினி இவ்வளவு சாகசங்கள் செய்வது பெரிது என்று பல டீவீட்கள் வந்தவண்ணம் உள்ளன. 

ட்விட்டர் பயன்படுத்தும் ஒருவர் கூறுகையில் : "பியர் கிரில்ஸ் இந்த நிகழ்ச்சியில் பல முறை கூறியதைப் போல, ரஜினிகாந்தை பொறுத்தவரை, 'வயது என்பது ஒரு எண்' என்று கூறினார். இதோ "இன்டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்" நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் சாகசத்தைப் பற்றி ட்விட்டரில் பலர் பகிர்ந்து.
 

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது, மேலும் இந்த படப்பிடிப்பின்போது ரஜினிகாந்திற்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போதும் ANI செய்தி நிறுவனத்தை சந்தித்த ரஜிகாந்த், படப்பிடிப்பின்போது முற்கள் குத்தியதால் சிறு சிறு கீறல்கள் ஏற்பட்டதாக கூறினார். முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்காக பியர் கிரில்ஸுடன் படப்பிடிப்பில் ஈடுபட்டது ஒரு "மறக்க முடியாத அனுபவம்" என்று வர்ணித்த ரஜினிகாந்த், "மறக்க முடியாத அனுபவத்திற்கு மிக்க நன்றி பியர் கிரில்ஸ் ... லவ் யூ டிஸ்கவரி இந்தியா. நன்றி". என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.