'ஷூட்டிங்கின்போது ரஜினிகாந்துக்கு காயம் ஏற்படவில்லை' - பியர் கிரில்ஸ் தகவல்!!

டிஸ்கவரி இந்தியாவின் செய்தி தொடர்பாளர் ரஜினிகாந்த் காயம் அடையவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

'ஷூட்டிங்கின்போது ரஜினிகாந்துக்கு காயம் ஏற்படவில்லை' - பியர் கிரில்ஸ் தகவல்!!

கில்ஸ் உடனான நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்று என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Bengaluru:

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அந்த நிகழ்ச்சியை நடத்தும் பியர் கிரில்ஸ் இன்று தெரிவித்துள்ளார். 

'ரஜினிகாந்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அவர் தைரியமும் உறுதியும் மிக்கவர். விடா முயற்சிக்கு சொந்தக் காரர்' என்று கிரில்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார். 

பந்திப்பூர் வனக் காப்பாளரான டி. பாலச்சந்திராவும், ரஜினிகாந்த் காயம் அடையவில்லை என்று கூறியுள்ளார். முன்பு பரவிய செய்தி பொய்யானது என்றும் அவர் தெரிவித்தார்.

'ரஜினி காயம் அடைந்து விட்டார் என்று வெளிவந்த தகவல்கள் பொய்யானது. நிகழ்ச்சியின்படி ரஜினிகாந்த் விழுவதுபோன்ற ஒரு காட்சி இருக்கும். அதன்டிப அவர் கயிற்றில் இருந்து கீழே குதித்தார். இதன்பின்னர் எல்லோரும் அவர் பக்கம் ஓடிச்சென்றனர். இது நிகழ்ச்சியின் வடிவமைப்பே தவிர வேறொன்றுமில்லை' என்று பாலச்சந்திரா கூறியுள்ளார்.

இதே போன்று டிஸ்கவரி இந்தியா சேனலின் செய்தி தொடர்பாளர், 'நாங்கள் திட்டமிட்டபடி மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதுதொடர்பாக வதந்திகள் பரப்பப்படுகின்றன' என்று தெரிவித்தார்.

835t22a

43 ஆண்டுகாலமாக சினிமாவில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் மூலமாக டிவி நிகழ்ச்சிகளில் அறிமுகம் ஆகிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தண்ணீரை பாதுகாக்க தனிநபர்கள், அரசு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் முயற்சியில் ஈடுபட வேண்டும். டிஸ்கவரி மூலம் எடுக்கப்படும் இந்த நிகழ்ச்சி நாட்டில் உள்ள அனைவருக்கும் தண்ணீரை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

ஒவ்வொரு இந்தியரும் தண்ணீரைப் பாதுகாக்க பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். 

'40 ஆண்டுகளால சினிமா வாழ்க்கைக்கு பின்னர் இந்த நிகழ்ச்சியின் மூலமாக டிவியில் நான் அறிமுகமாகியுள்ளேன். வனப்பகுதிக்குள் எடுக்கப்படும் இந்த நிகழ்ச்சி தனித்துவம் வாய்ந்தது. பல்வேறு பிரபலங்களுடன் பியர் கிரில்ஸ் சாகச நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். நானும் இந்த சாகச சவாலை எதிர் நோக்கியுள்ளேன்' என்று ரஜினி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

கர்நாடகாவில் மைசூர் வனப்பகுதியில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். உத்தரகாண்டின் ஜிம் கார்பெட் பூங்காவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 

More News