This Article is From Feb 08, 2019

கமலுக்கு நேரில் சென்று பத்திரிகை வைத்த ரஜினிகாந்த்!

திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூகவலைதள பக்கத்தில் இரண்டு நாட்கள் முன் தெரிவித்திருந்தார்.

கமலுக்கு நேரில் சென்று பத்திரிகை வைத்த ரஜினிகாந்த்!

கமல் அலுவலகத்ததில் நேரில் சென்று சந்தித்தார் ரஜினிகாந்த்.

Chennai:

நடிகர் ரஜினிகாந்த் வரும் பிப்.11 தேதி நடைபெற உள்ள தனது மகள் செளந்தர்யா திருமணத்திற்காக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு நேரில் சென்று பத்திரிகை வைத்தார்.

முன்னதாக, நடிகர் விசாகன் வனங்காமுடியுடனான திருமணத்தை டிவிட்டர் மூலம் செளந்தர்யா ரஜினிகாந்த் உறுதி செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ரஜினி கமல் சந்திப்பு குறித்த புகைப்படங்களை கமல்ஹாசன் குழுவினர் வெளியிட்டனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு செளந்தர்யாவுக்கு ஏற்கனவே தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருடன் திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர் அவர்கள் இருவரும் 2016ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர். 

இனிடையே நேற்று செளந்தர்யாவின் குழுவினர் விசாகன் வனங்காமுடி, செளந்தர்யா ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர். 
 

திரைத்துறையில் கிராபிக்ஸ் டிசைனராக தனது பணியை செளந்தர்யா தொடங்கியவர். பாபா, மஜா, சண்டைக்கோழி மற்றும் சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

இயக்குநராக முதல் படமாக கோச்சடையான் திரைப்படத்தை தனது தந்தையை வைத்து இயக்கினார். இதைதொடர்ந்து தற்போது, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக எடுத்து வருகிறார்.
 

.