செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடி திருமணப் புகைப்படங்கள்

அந்த வரவேற்பு நிகழ்ச்சியிலேயே சங்கீத் மற்றும் மெகந்தி போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

 Share
EMAIL
PRINT
COMMENTS
செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடி திருமணப் புகைப்படங்கள்

செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடி திருமணப் புகைப்படம்


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. செளந்தர்யா ரஜினிகாந்தி திருமணத்தின் சில துளிகள்
  2. வரவேற்பு நிகழ்ச்சியிலேயே சங்கீத் மற்றும் மெகந்தி நிகழ்ச்சிகளும் நடந்தது.
  3. திருமணம் லீலா பேலஸில் நடைபெறுகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் லீலா பேலஸிற்கு வந்து சேர்ந்துள்ளனர். ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா தொழிலதிபரான விசாகன் வணங்காமுடியை தென்னிந்திய முறைப்படி இன்று திருமணம் செய்யவுள்ளார். ஏஎன்ஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் திருமணத்திற்காக  நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸிற்கு வருகை தரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மணமகன் விசாகன் வணங்காமுடியின் குடும்பம் அங்கு வந்து சேர்ந்தனர். முன்னதாக செளந்தர்யாவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பிரக்ருதி ஆனந்த் மணமகளின் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். செளந்தர்யா திருமணத்திற்காக அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்த உடையை தேர்வு செய்திருந்தார்.

நடிகர் கமல்ஹாசன் இந்த திருமணத்திற்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் நடிகர் கமலஹாசனுக்கு திருமணத்திற்கான அழைப்பிதழை நேரில் சென்று  வழங்கினார்.  வெள்ளியன்று நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் வரவேற்பு நிகழ்ச்சியை வைத்திருந்தனர்.

ஏஎன்ஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட  புகைப்படங்கள்

 

செளந்தர்யாவின் சில திருமணப் புகைப்படங்கள்

திருமணம் நடக்கும் இடமான லீலாபேலஸிற்கு வருகை தரும் செளந்தர்யா மற்றும் விசாகன் வணங்காமுடி

 

 

 

 

 

பிரக்ருதி ஆனந்த் வெளியிட்ட மணமகளின் சில புகைப்படங்கள். 

6tj1p40o

 

அந்த வரவேற்பு நிகழ்ச்சியிலேயே சங்கீத் மற்றும் மெகந்தி போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தேறின. சனிக்கிழமை செளந்தர்யா அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து “ஆசிர்வாதங்கள் வார்த்தைகளை கடந்தது. என் வாழ்வின் முக்கிய மூன்று ஆண்கள்… என் அப்பா… தேவதை போன்ற என்ற மகன்… மற்றும் என் விசாகன்… என்று கூறியிருந்தார்.   

 

நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் நடனமாடி மகிழ்ந்தார். 

 

 

இது செளந்தர்யா மற்றும் விசாகன் வணங்காமுடிக்கு இரண்டாவது திருமணமாகும். செளந்தர்யா இதற்கு முன் தொழிலதிபர் ஆர். அஸ்வினை திருமணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. விசாகன் வணங்காமுடி மேகசின் எடிட்டரான கனிகா குமரனை திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  செளந்தர்யா ஒரு கிராபிக் டிசைனர் மற்றும் திரைப்பட இயக்குநரும் ஆவார். நடிகர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டாதாரி 2 வை இயக்கினார். விசாகன்  சொந்தமாக பார்மாஷூட்டிகல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................