This Article is From Feb 05, 2020

சிஏஏ விவகாரம்: “முஸ்லிம்களுக்கு பாதிப்புனா முதல் ஆளா குரல் கொடுப்பேன்!”- ரஜினிகாந்த் பேட்டி!!

Rajini Press Meet: "சிஏஏ பற்றி அவங்க ரொம்ப தெளிவா சொல்லிட்டாங்க. இந்தியாவுல வாழுற மக்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது."

சிஏஏ விவகாரம்: “முஸ்லிம்களுக்கு பாதிப்புனா முதல் ஆளா குரல் கொடுப்பேன்!”- ரஜினிகாந்த் பேட்டி!!

Rajini Press Meet: தொடர்ந்து ஈழ அகதிகள் சிஏஏ-வில் சேர்க்கப்படாதது குறித்துப் பேசிய ரஜினி...

Rajini Press Meet: நடிகர் ரஜினிகாந்த், இன்று சென்னை, போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து சிஏஏ- என்ஆர்சி - என்பிஆர் உள்ளிட்டவைகள் குறித்து தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, மற்றும் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை குறித்துப் பேசும்போது ரஜினி, “என்பிஆர் ரொம்ப முக்கியம். 2010 ஆம் ஆண்டு காங்கிரஸும் செய்திருக்காங்க. 2020-லயும் எடுத்துதான் ஆகணும். இது மக்கள் தொகை. யார் வெளிநாட்டுக் காரங்க. யார் உள்நாட்டுக் காரங்கனு தெரிஞ்சாகணும். அது ரொம்ப அவசியம். என்சிஆர்-ஐப் பொறுத்தவரை மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கல. இன்னும் யோசனதான் பண்ணிட்டு இருக்காங்க. அது பற்றி முழுசா தெரிஞ்ச பிறகுதான் என்னானு சொல்ல முடியும்.

சிஏஏ பற்றி அவங்க ரொம்ப தெளிவா சொல்லிட்டாங்க. இந்தியாவுல வாழுற மக்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. அவங்க குடியுரிமைக்கு எந்த பாதிப்பும் இருக்காதுனு சொல்லிட்டாங்க. மற்ற நாடுகளில இருந்து வரவங்களுக்கான ஒரு நடைமுறைதான் இது. முக்கியமா முஸ்லிம்களுக்கு இந்த சட்டம் மூலம் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறதா பீதி கிளப்பிட்டாங்க. இஸ்லாம் மதத்திற்கு எந்த அளவுக்கு இங்க உரிமை இருக்குனா, பிரிவினை போது அங்க போகாம இங்கயே இருந்தாங்க. வாழ்ந்தாலும் செத்தாலும் இதுதான் என் பூமி வாழுறாங்க. அவங்கள எப்டி வந்து வெளிய அனுப்புறது. 

அந்த மாதிரி எதாவது முஸ்லிம்களுக்கு பாதிப்பு வந்தா, ரஜினிகாந்த் முதல் ஆளா குரல் கொடுப்பேன். ஆனா, சில அரசியல் கட்சிகள் அவங்க சொந்த லாபத்துக்காக தூண்டி விடுறாங்க. மத குருகளும் இதுக்குத் துணை போறாங்க. இது ரொம்ப தவறான விஷயம்.

முக்கியமா மாணவர்கள், தயவு செய்து போராட்டத்துக்கு இறங்குறதுக்கு முன்னாடி தீர விசாரிச்சிட்டு இறங்குங்க. இல்லைனா உங்களுக்குதான் பிரச்னை வரும். போலீஸ் எப்ஐஆர் எதாவது போட்டாங்கன்னா, வாழ்க்கையே முடிஞ்சு போயிடும். கவனமா இருக்கணும் மாணவர்கள்” என்றார். 

தொடர்ந்து ஈழ அகதிகள் சிஏஏ-வில் சேர்க்கப்படாதது குறித்துப் பேசிய ரஜினி, “இலங்கையிலிருந்து இங்க வந்த தமிழர்கள் 30 ஆண்டுகளா இங்கயே இருக்காங்க. அவங்களுக்கு ரெட்டைக் குடியுரிமை கொடுக்கணும்னுறதுதான் என் நிலைப்பாடு,” என்று கூறி காரில் பறந்தார். 


 

.