This Article is From Jan 24, 2020

பெரியார் ரஜினி சர்ச்சை: யார் என்ன சொன்னார்கள்..? #PhotoGallery

Rajini Periyar Row: “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” திராவிட இயக்கத்தினர்

பெரியார் ரஜினி சர்ச்சை: யார் என்ன சொன்னார்கள்..? #PhotoGallery

Rajini Periyar Row: பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ரஜினி.

Rajini Periyar Row: ‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசியதற்கு திராவிட இயக்கத்தினர் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ரஜினி. இந்த விவகாரத்தில் யார் என்ன பேசினார்கள் என்பதற்கான தொகுப்பு கிழே.

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது:

7t1aiqt

‘1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது'

ரஜினிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் எதிர்ப்பு:

01d489ao

‘பெரியார் குறித்து கருத்து தெரிவித்ததற்கான விலையை ரஜினி கொடுப்பார். ஏற்கனவே அவருக்கு என்ன மரியாதை இருந்தது என்பது வெளியே தெரிந்து விட்டது. அதனால் தவறான தகவல் கொடுக்கும்போது ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மற்றவர்கள் சுட்டி காட்டுகின்றனர்'

ரஜினிக்கு மு.க.ஸ்டாலினின் அறிவுரை:

4bfl2t6o

‘நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல. அவர் ஒரு நடிகர். அவருக்கு என் தாழ்மையான வேண்டுகோள் ஒன்றுதான். தமிழ் இனத்துக்காக 95 ஆண்டு காலம் உழைத்தவர் தந்தை பெரியார். அவர் குறித்து பொதுவெளியில் பேசும்போது மிகவும் யோசித்து, சிந்தித்துப் பேச வேண்டும்'

ரஜினியைக் கண்டித்த செல்லூர் ராஜூ:

sellur k raju

‘ரஜினி, எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர். ஆனால், தற்போது அவரை யாரோ தவறாக வழிநடத்தி வருகிறார்கள். அதனால்தான் அவர் இப்படி அவசரப்பட்டுப் பேசியுள்ளார். ரஜினியின் மகளுக்கு சமீபத்தில் மறுமணம் நடந்தது. அது யாரால் சாத்தியப்பட்டது. ரஜினி பின்பற்றும் மதத்தில் அந்தக் காலத்தில் மறுமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்குமா. ஆனால், இன்று அது சாத்தியமாக உள்ளது. அதற்கு யார் காரணம். பெரியார், தமிழகத்தில் தீர்க்கமாக செய்த போராட்டங்கள்தான் காரணம்'

எச்.ராஜா ரஜினியின் கருத்து பற்றி:

h raja 650

‘ரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்; ஏனென்றால், அன்று அவர் பேசியது பொய் அல்ல. அன்று ஏதோ நாங்கள் பெரிய வீரச்செயலை செய்துவிட்டதாக தம்பட்டம் அடித்த திராவிட கழகத்தினர் இன்று எதற்காக மறுக்கிறார்கள். அதனால், தான் நீங்கள் செய்ததை மறுக்காதீர்கள், மறந்துவிடுங்கள் என்கிறார் ரஜினி'

என்ன சொல்கிறார் ‘துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி:

ulami5h8

‘பல துக்ளக் வாசகர்கள் திகவின் 1971 சேலம் ஹிந்து கடவுள் அவமதிப்பு ஊர்வலம் பற்றி வந்த துக்ளக் இதழை மறுபடி வெளியிடும் படி கேட்டிருக்கிறார்கள். அந்த முழு இதழும் அவசியமில்லை. அதில் வந்த சேலம் பற்றிய விவரங்களை மட்டும் வருகிற இதழில் கொடுக்க நினைக்கிறோம்' 

.