உள்ளாட்சித் தேர்தல்: Rajini கொடுத்த ஷாக்!

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது

உள்ளாட்சித் தேர்தல்: Rajini கொடுத்த ஷாக்!

வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய 2 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம், சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்றம், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நமது அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து 6-ம்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது. 

இந்நிலையில் வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையில், தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகள் எதுவும் முடிக்கப்படாமல் உள்ளது. இதுபோன்ற சூழலில் தான் தற்போது மாநிலம் முழுவதும் 9 புதிய மாவட்டங்கள் துவங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்ற உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்துதான் புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

முன்னதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

More News