This Article is From Jan 09, 2020

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது ரஜினியின் 'தர்பார்' திரைப்படம் - படக்குழுவினர் அதிர்ச்சி!!

Darbar தமிழ் ராக்கர்ஸ் (Tamil Rockers) இணைய தளத்தை நடத்திக் கொண்டிருப்பது யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது ரஜினியின் 'தர்பார்' திரைப்படம் - படக்குழுவினர் அதிர்ச்சி!!

உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி  நடித்துள்ள தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்திலும் தர்பார் இன்று வெளியிடப்பட்டிருப்பது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

o544k928

ஒவ்வொரு முறையும் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதே நாளில், அந்த திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்படுவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்க சினிமாத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் அவை பலன் அளிக்கவில்லை. 

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் ரஜினி நடித்திருந்த 2.0 திரைப்படம், திரைக்கு வந்த அதே நாளில் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியானது.

9hacfdqo

தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தை நடத்திக் கொண்டிருப்பது யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

முன்னதாக விஜய் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற பிகில், தனுஷின் அசுரன் உள்ளிட்ட மெகா நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்த அதே நாளில் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்திலும் வெளியாகின.

ஒரு முறை சம்பந்தப்பட்ட இணைய தளத்தை முடக்கினாலும், இணையதள முகவரியை மாற்றிக் கொண்டு தமிழ் ராக்கர்ஸ் தனது புதுப்படம் வெளியிடும் பணியை தொடர்கிறது. 

ரஜினியின் ‘தர்பார்' திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம் பெற்றுள்ளனர்.

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தற்போது உலகமெங்கும் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 


 

.