அதிக எடை ஏற்றி சென்ற ராஜஸ்தான் லாரி டிரைவருக்கு ரூ. 1.41 லட்சம் அபராதம்

18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் குற்றவாளியாக கருதப்படுவார்கள். ரூ. 25,000 அபராதம் மூன்று ஆண்டு சிறை தண்டனை மேலும் ஓட்டுநருக்கான உரிமம் ரத்து செய்யப்படும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அதிக எடை ஏற்றி சென்ற ராஜஸ்தான் லாரி டிரைவருக்கு ரூ. 1.41 லட்சம் அபராதம்

லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதம்


New Delhi: 

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை நாடு முழுவதும் உயர்த்தியுள்ள நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு லாரி உரிமையாளருக்கு அதிக எடை ஏற்றி சென்றதற்காக ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளனர். 

ராஜஸ்தானை சேர்ந்த  லாரி உரிமையாளர் பகவான் ராம்க்கு புதிய போக்குவரத்து விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக  எடை ஏற்றிச் சென்றதற்காக  ரூ. 1,41,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அபராதம் விதிக்கப்பட்ட ரசீது ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் புகைப்படம் எடுத்து ட்வீட் செய்துள்ளது.  

மும்பையில் உள்ள பார்ந்த்ரா -வொர்லி வேகமாக வந்ததற்காக தனக்கும் அபராதம் விதித்ததற்காக தனகும் அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி கூட கூறினார். 

புதிய விதிகள் படி - வாகனம் ஓட்டுபோது செல்போன் பயன்படுத்துதல், சிக்னலில்  போக்குவரத்து விளக்குகளை தாண்டி செல்லுதல் தவறான பாதையில் செல்லுதல் ஆகியவற்றை குற்றமாக கருதும் நடைமுறை அமுலுக்கு வந்தது. சீட் பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் 10 மடங்கு அதிகரித்துள்ளது. ரூ. 100 முதல் ரூ. 1,000 ஆகவும், வாகனம் ஓட்டும்போது செல்போன்களைப் பயன்படுத்தினால் ரூ. 1000லிருந்து ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும். 

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2,000 முதல் ரூ.10,000 மும். வேகமாக ஓட்டினால் ரூ. 1,000- ரூ. 2,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் குற்றவாளியாக கருதப்படுவார்கள். ரூ. 25,000 அபராதம்  மூன்று ஆண்டு சிறை தண்டனை மேலும் ஓட்டுநருக்கான உரிமம் ரத்து செய்யப்படும்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................