ராஜஸ்தான் இடைத் தேர்தலில் வெற்றி உறுதி!! சச்சின் பைலட் நம்பிக்கை!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் சச்சின் பைலட்டும் உள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ராஜஸ்தான் இடைத் தேர்தலில் வெற்றி உறுதி!! சச்சின் பைலட் நம்பிக்கை!

ராஜஸ்தானில் 2 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.


Jaipur: 

ராஜஸ்தான் சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்று அக்கட்சியின் முக்கிய தலைவரும் மாநில துணை முதல்வருமான சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் மண்டவா மற்றும் கிம்சார் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 21-ம்தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து சச்சின் பைலட் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி உறுதியாக வெற்றி பெறும்.  மாநிலத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். எங்கள் அரசை ஏற்கும் வகையில் இந்த இடைத்தேர்தலில் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். 

மாநில அரசின் நடவடிக்கையை எடைபோடும் விதமாக இந்த இடைத்தேர்தல் இருக்கும். இருப்பினும் இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் உள்ளூர் பிரச்னை முக்கிய பங்கை வகிக்கும். ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுத்து பணியாற்ற வேண்டும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

கின்ஸ்வார் தொகுதி எம்.எல்.ஏ. ஹனுமன் பெனிவால் மற்றும் மந்தவா தொகுதி எம்.எல்.ஏ. நரேந்திர குமார் ஆகியோர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து  அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................