This Article is From Oct 14, 2019

75 வயதில் தாயான பெண்..! ராஜஸ்தானில் அதிசயம்..!

ராஜஸ்தானில் 75 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார்.

75 வயதில் தாயான பெண்..! ராஜஸ்தானில் அதிசயம்..!

ராஜஸ்தான் : 75 வயதில் குழந்தையை பெற்றெடுத்தார் விவசாயி பெண். (Representational)

Jaipur:

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள கின்கார் மருத்துவமனையில் 75 வயதில் பெண் ஒருவர் ஐவிஎஃப் லேட் முறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

600 கிராம் மட்டுமே எடை கொண்ட அந்த குழந்தை, என்.ஐ.சி.யூ எனும் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாகவே ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்ட அவர், சொந்தமாக தானே குழந்தையை பெற்றெடுக்க விரும்பி, மருத்துவர்களை நாடியுள்ளார். “அவர் ஐ.வி.எஃப் முறை சிகிச்சையை முயற்சித்து பார்க்க விரும்பினார்” என மருத்துவர் அபிலாஷா கின்கார் கூறினார்.

வயதில் முதிய இப்பெண்ணுக்கு உடலில் தேவையான வளிமை இல்லாத காரணத்தினாலும், மேலும் அவருக்கு ஒரு நுறையீரல் மட்டுமே இருப்பதாலும் அவர், 6.5 மாதங்களிலேயே குழந்தையை பெற்றெடுக்க வேண்டி இருந்தது.

“ஒரு கிராமபுற விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண், இந்த வயதில் தனக்கென சொந்த குழந்தை வேண்டும் என கேட்டது, மருத்துவர்களிடையே மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது” என மருத்துவர் அபிலாஷா கூறினார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.