குவகாத்தி விமான நிலையத்திற்குள் மழை - வைரல் வீடியோ

லோக்பிரிய கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையத்திற்குள் மழை நீர் ஊற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
Guwahati: 

அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள லோக்பிரிய கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையத்திற்குள் மழை நீர் ஊற்றும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை, குவகாத்தியில் பெய்த கனமழை காரணமாக, விமான நிலையத்தின் மேற்சுவரில் இருந்து மழை நீர் வடிந்துள்ளது. சிறிது நேரங்களிலேயே, மழை நீரின் வேகம் அதிகரித்ததால், விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

விமான நிலையத்திற்குள் மழை நீர் ஊற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பயணிகள் பகிர்ந்தனர். மேலும், இந்நிலையை சரி செய்ய கோரி அதிகாரிகளுக்கு ட்வீட் செய்தனர்.

 

“இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மழை நீரினால் விமான நிலையத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. விமானங்களும் வழக்கம் போல இயக்கப்பட்டன” என்று குவகாத்தி விமான நிலைய அதிகாரி டெய்லாங் தெரிவித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................