
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி போல் பேசி கலாய்த்துள்ளார்
வட மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பிரசாரம் சூடு பிடித்துள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி போல் பேசி கலாய்த்துள்ளார்.
பிரசாரத்தின் போது ராகுல், ‘மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், அவரை யாரும் பிரதமர் என்று அழைக்க வேண்டாம் என்றும், தன்னை காவல்காரன் என்று அழைக்குமாறும் கூறுகிறார். அந்த காவல்காரன், உங்களை மித்ரான் (நண்பர்கள்) என்றழைக்கிறார். ஆனால் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, அனில் அம்பானி உள்ளிட்டவர்களை அவர் சகோ என்று அழைக்கிறார்’ என்று மோடி போல் மிமிக்ரி செய்து அசத்தினார்.
#WATCH: Congress President Rahul Gandhi mimics PM Modi at a rally in Madhya Pradesh's Morena. pic.twitter.com/kTI8Trqpwm
— ANI (@ANI) October 16, 2018
மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு கடந்த மூன்று தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், அங்கு இந்தமுறை காங்கிரஸ் அரியணையில் ஏற முழு வீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.