‘சவுகிதார், திருடன்தான்!’- மீண்டும் உரக்கச் சொன்ன ராகுல் காந்தி #NDTVExclusive

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று NDTV-யிடம் பிரத்யேகப் பேட்டியளித்தார். 

‘சவுகிதார், திருடன்தான்!’- மீண்டும் உரக்கச் சொன்ன ராகுல் காந்தி #NDTVExclusive

"உத்தர பிரதேசத்தில் நாங்கள் வெற்றி பெற முடியாது என்று நினைக்கும் இடங்களில், மாயாவதி-அகிலேஷ் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்போம்"

New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று NDTV-யிடம் பிரத்யேகப் பேட்டியளித்தார். 

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வாக்கைப் பிரிப்பதாக சொல்லும் கருத்துக்கு உங்கள் பதில்?

உத்தர பிரதேசத்தில் நாங்கள் வெற்றி பெற முடியாது என்று நினைக்கும் இடங்களில், மாயாவதி-அகிலேஷ் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்போம். நாங்கள் அனைவரும் சேர்ந்து பாஜக-வை வீழ்த்துவோம். பாஜக-வை தோற்கடிப்பதுதான் எங்களது முதல் லட்சியம். அதை எப்பாடு பட்டாவது நிறைவேற்றிக் காட்டுவோம். 

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் ஏன் கூட்டணி ஏற்படவில்லை?

டெல்லியில் நாங்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருந்தோம். எங்களது கட்சிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுடன் நான் கூட்டணி வைக்கத் தயாராகவே இருந்தேன். ஆனால் கெஜ்ரிவால் அதற்கு ஒத்துழைப்புத் தரவில்லை. பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்பது மட்டும்தான் எங்களது நோக்கம். அதற்காக நாங்கள் எதையும் செய்யத் தயார். 

தமிழ்நாடு, பிகார், ஜம்மூ - காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நாங்கள் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். நாங்கள் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று சொல்வது தவறான கருத்து. நாங்கள் அனைத்துக்கும் தயாராகவே இருந்தோம். சில இடங்களில் கூட்டணி அமைக்க முடியாமல் போனது. 

பிரதமர் மோடி பற்றி?

பிரதமர் மோடி, ஊழலற்றவர், அப்பழுக்கற்றவர் என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வந்த தகவல்படி 67 சதவிகித இந்திய மக்கள் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக நம்புகின்றனர். 

Newsbeep

சவுகிதார் திருடன்தான் என்பதை மீண்டும் சொல்கிறேன். நான் முன்னர் உச்ச நீதிமன்றமே சொன்னதாக தெரிவித்தது தவறு. அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், மோடி மற்றும் பாஜக-விடம் நான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. அவர் திருடன்தான். 

பிரதமர் மோடி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவார் என்று சொன்னார். விவசாயிகளுக்கு பல நலத் திட்டங்களை செய்வதாக சொன்னார். ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவார் என்றார். இன்று எதைப் பற்றியும் அவர் பேச முடியாது. நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.

பிரியங்கா காந்தி வாரணாசியில் ஏன் போட்டியிடவில்லை?

பிரியங்கா, வாரணாசியில் போட்டியிடப் போவதில்லை என்பதில் நான் முதலில் இருந்தே தெளிவாகத்தான் இருந்தேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சிலர், அவர் வாரணாசியில் இருந்து போட்டியிட உள்ளார் என்று வதந்தி கிளப்பிவிட்டனர். அதில், இதற்கு மேல் சொல்ல ஒன்றமில்லை. 

காங்கிரஸின் பலம் மற்றும் பலவீனம் என்ன?

காங்கிரஸின் பலம் என்பது நாங்கள் மக்கள் சொல்வதை கேட்டு அதன்படி நடப்பது. மக்களைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

காங்கிரஸின் பலவீனம் என்பது, நாங்கள் சில நேரங்களில் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.