சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி! - வீடியோ

Haryana Assembly Elections 2019: மோசமான வானிலை காரணமாக ராகுலின் வான்வழிப் பயணம் தடைப்பட்டது. இதனிடையே, மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யும் வரை சிறுவர்களுடன் ராகுல் கிரிக்கெட் விளையாடினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Haryana Assembly Elections 2019: சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராகுல்.


Rewari, Haryana: 

ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பும் வழியில் மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் வழியிலே தரையிரக்கப்பட்டது. 

தொடர்ந்து, அவர் டெல்லி செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதனிடையே, அவரது ஹெலிகாப்டர் தரையிரக்கப்பட்டது ஒரு தனியார் கல்லூரி மைதானம் ஆகும். அங்கு சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளனர். 

இதனை பார்த்த ராகுல் காந்தி சிறுவர்களுடன் சிறுவர்களாக கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ராகுலுக்கு பந்து வீச, ராகுல் பேட்டிங் செய்கிறார். இதனிடையே, பின்னால் ராகுலை ஊக்குப்படுத்தி சிறுவர்களின் பெரும் சத்தம் கேட்கிறது.
 

bnojfhi8

ஒரு புகைப்படத்தில் ராகுல் சிறுவர்களுடன் உரையாடுகிறார்.


இதைத்தொடர்ந்து, அந்த சிறுவர்களுடன் ராகுல் உரையாடுகிறார். இதனிடையே, மோசமான வானிலை காரணமாக ராகுலின் வான்வழிப் பயணத்தை தொடர முடியாது என விமானி தெரிவிக்க, பின்னர் அவர் அங்கிருந்து தரை வழி மார்க்கமாக டெல்லி புறப்பட்டு சென்றார். 

ஹரியானா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிவித்திருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரியானாவின் மஹேந்திரகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சோனியா காந்தியின் பிரச்சார பயணம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவி்க்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, எனினும், அவருக்கு பதில் அவரது மகன் ராகுல் காந்தி இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய, ராகுல் காந்தி, அரசு நடத்தும் நிறுவனங்களை தனியார்மயமாக்குவது கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப சூழ்நிலையை சமாளிக்க பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலிருந்து திட்டங்களை காப்பி அடித்து சமாளித்து வருகின்றனர் என்றும் சாடினார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................