சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் ?

3D திரைப்படத்தில் இந்தியன் சூப்பர் ஹீரோ கதையில் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் ?

ஹைலைட்ஸ்

  1. காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது
  2. முதல் முறையாக 3டி படத்தை தயாரிக்க உள்ளது சன் பிக்சர்ஸ்
  3. இந்தியன் சூப்பர் ஹீரோவாக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் லாரன்ஸ்

இயக்குநர் மற்றும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘காஞ்சனா 3'. இப்படம் விமர்சன ரீதியாகவும்,  பொருளாதார ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியிலும் இப்படம் தயாராகி வருகிறது. அதனையும் லாரன்ஸே இயக்கி வருகிறார். இந்நிலையில்  சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கும்  3D திரைப்படத்தில் இந்தியன் சூப்பர் ஹீரோ கதையில் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப் படுகிறது.

ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிய காஞ்சனா படத்தை சன்பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................