This Article is From Sep 16, 2019

பாம்பு, முதலையை வைத்து பிரதமர் மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாடகி : அபராதம் விதித்த வனவிலங்கு துறை

“வனவிலங்கு துறை ஒரு துரோகி” என்று பிர்சாடா கூறினார். நான் இப்போதும் இந்தியர்களை விமர்சிக்கவில்லை… நான் மோடியை மட்டுமே குறி வைக்கிறேன்.

பாம்பு, முதலையை வைத்து பிரதமர் மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாடகி : அபராதம் விதித்த வனவிலங்கு துறை

வனவிலங்கு துறை பாடகிக்கு அபராதம் விதித்துள்ளது.

Islamabad:

பாகிஸ்தான் பாடகி ரபி பிர்சாடா காஷ்மீர் விவகாரத்தை மனதில் கொண்டு பாம்பு மற்றும் முதலைகள் வைத்து பிரதமர் மோடியை அச்சுறுத்த நினைத்தவருக்கு பாகிஸ்தான் அரசு அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தான் ஊடகங்களில் வந்த தகவலின்படி ஊர்வனவற்றை சட்டவிரோதமாக சிறைபிடித்ததற்காக வனவிலங்கு துறை பாடகிக்கு அபராதம் விதித்துள்ளது. 

இந்த மாத தொடக்கத்தில் தனது யூட்டியூப் சேனலான பிர்சாடாவில் காஷ்மீர் பிரச்னையை குறித்து பேசியபோது “ இவை அனைத்தும் பிரதமர் மோடிக்கு எனது பரிசு. என் நண்பர்கள் உங்களுக்கு விருந்து வைப்பார்கள்” என்று கூறியுள்ளார். 

வீடியோவை தொடங்கும் போது ஒரு காஷ்மீர் பெண் அந்த பாம்புகளை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல தயாராக உள்ளதாக  கூறியுள்ளார்.  வீடியோவில் பல பாம்புகள் மற்றும் முதலைகளும் மேசையில் இருப்பதைக் காணலாம். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிர்சாடாவை ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைத்து அபராதம் விதிக்கப்படலாம். விலங்கினங்கள் தனக்கு சொந்தமானதல்ல என்றும் அந்த வீடியோவிற்காக  அவற்றை வாடகைக்கு எடுத்ததாகவும் பாடகி கூறியுள்ளார். 

“கடந்த 5 ஆண்டுகளில் இந்தபாம்புகளுடன் செய்தி சேனல்களில் தோன்றினேன். அப்போது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார். “துரதிஷ்டவசமாக இப்போது நான் மோடியை எச்சரித்ததற்காக நடவடிக்கைகளை எதிர்கொள்வதாக” அவர் கூறினார்.

 “வனவிலங்கு துறை ஒரு துரோகி” என்று பிர்சாடா கூறினார்.  நான் இப்போதும் இந்தியர்களை விமர்சிக்கவில்லை… நான் மோடியை  மட்டுமே குறி வைக்கிறேன். 

உங்களால் பாகிஸ்தானை நேசிக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் உங்கள் தேசத்தை காட்டிக் கொடுக்கவேண்டாம்” என்று அவர் கூறினார். 

வனவிலங்கு துறையிலிருந்து எந்தவொரு ஆவணமும் வரவில்லையென்றும் ஏதாவது கிடைத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் பாடகி கூறினார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.