கத்தார் நாட்டில் இருந்து வெளியேற அனுமதி தேவையில்லை! புதிய சட்டம் அமல்

கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு பணியாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை

 Share
EMAIL
PRINT
COMMENTS
கத்தார் நாட்டில் இருந்து வெளியேற அனுமதி தேவையில்லை! புதிய சட்டம் அமல்
DUBAI: 

கத்தார் நாட்டில் வெளிநாட்டு மக்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். சொந்த காரணங்களுக்காக அவர்கள் நாடு திரும்புவதற்கு, அவ்வளவு எளிதில் விசா அனுமதி வழங்கப்பட மாட்டாது. இதனால் கத்தாரில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்கள், சொந்த நாடு திரும்புவது கடினமாக இருந்தது. இந்நிலையில், கத்தாரின் குடி அமர்வு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு பணியாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை என்ற சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. இதனால் வெளிநாட்டு பணியாளர்கள் பயனடைவார்கள்.

மேலும், கத்தாரின் டோஹாவில் வரும் 2022 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................