பி.வி. சிந்து வெற்றி பெற்றதன் ரகசியம் இதுதான் - வைரல் வீடியோ

பிவி சிந்து உலக சாம்பியனாக வெற்றி பெற்றதில் எந்த மர்மமும் இல்லை. வளர்ந்து வரும் இந்திய விளையாட்டு வீரர்கள் அனைவரும் அவரின் வழியை பின்பற்ற வேண்டும். முதலிடம் பெறுவதற்கான அர்ப்பணிப்பிலிருந்து யாரும் விலக மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பி.வி. சிந்து வெற்றி பெற்றதன் ரகசியம் இதுதான் - வைரல் வீடியோ

பி.வி சிந்துவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.


New Delhi: 

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பி.வி சிந்துவின் பயிற்சி வீடியோவை பதிவிட்டு பி.வி சிந்து உலக சாம்பியன் ஆனதில் எந்த மர்மமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.   ஞாயிற்றுக் கிழமை நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக பி.வி சிந்து பட்டம் பெற்றார்.  

பிவி சிந்துவின் பயிற்சி வீடியோவை பார்த்து பலரும் மிரண்டு போய்தான் உள்ளனர். தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பிவி சிந்துவின் பயிற்சி வீடியோவை பதிவிட்டு, பிவி சிந்து உலக சாம்பியனாக வெற்றி பெற்றதில் எந்த மர்மமும் இல்லை. வளர்ந்து வரும் இந்திய விளையாட்டு  வீரர்கள் அனைவரும் அவரின் வழியை பின்பற்ற வேண்டும்.  முதலிடம் பெறுவதற்கான அர்ப்பணிப்பிலிருந்து யாரும் விலக மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

ஹைதராபாத்தில் உள்ள சுசித்ரா மேட்மிண்டன் அகாடமியில் பி.வி. சிந்து பயிற்சி பெற்ற வீடியோவுடன் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார். 

பி.வி. சிந்து ஞாயிற்றுக்கிழமை பேட்மிட்டன் உலக சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்தியர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை வீழ்த்தினார்.

பி.வி சிந்துவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................