This Article is From Dec 27, 2018

"ரஷ்யாவுக்கு புத்தாண்டு பரிசாக மாறிய அணுஆயுத சோதனை" - அதிபர் புதின்

அமெரிக்கா விமானங்களிலிருந்து ஏவும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்பணிக்கப்படும் என்றார். 

Moscow:

ரஷ்யா வெற்றிகரமாக தனது அணு ஆயுத ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது. இது ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு அதிக வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்பணிக்கப்படும் என்றார். 

அதிபர் புதின் இதனை வெற்றிகரமான சோதனை என்று கூறியுள்ளார். இந்த அணுஆயுதம் கம்சட்கா பெனின்சுலாவில் இலக்கை நோக்கி ஏவப்பட்ட இந்த ஏவுகணை 3500 மைல்தூரம் சென்று தாக்கக்கூடியது. இதனை இந்த நாட்டின் சிறந்த, சரியான புத்தாண்டு பரிசு என்று அதிபர் புதின் கூறியுள்ளார். இந்த ஏவுகணை சோதனைக்கான ஆணையை அதிபர் புதின் வழங்கினார். 

அவன்கார்ட் எனும் இந்த புதிய ஆயுதம் ஒலியை விட அதிக வேகத்தில் பயணிக்கக்கூடியது. ராக்கெட் மூலமாக ஏவப்பட்ட இந்த ஆயுதத்தில் இருந்து விடுபட்ட க்ளைடர்கள் வேகமாக இலக்கை நோக்கி பாய்ந்தன. வரலாற்று இது ஒரு முக்கியமான நாள் என்று அதிபர் கூறியுள்ளார். 

அமெரிக்கா விமானங்களிலிருந்து ஏவும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அவை ரஷ்யாவை எதிர்க்கும் நோக்கத்தில் தயாரிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

ரஷ்யா நடத்தியுள்ள சோதனையில் எந்தவிதமான ரியல் ஹைப்பர்சோனிக் பூஸ்ட் க்ளைடர் ஏவுகணையும்  சோதிக்கப்படவில்லை என்று புதின் உறுதியளித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.