சித்து பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது – ராஜினாமா கடிதத்தை ஏற்றார் பஞ்சாப் முதல்வர்!!

சித்து தனது உள்ளாட்சி துறையை மோசமாக கையாண்டதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியிருந்தார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
சித்து பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது – ராஜினாமா கடிதத்தை ஏற்றார் பஞ்சாப் முதல்வர்!!

கவர்னரும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுள்ளார்.


Chandigarh: 

பஞ்சாப் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் ராஜினாமா கடிதத்தை அமரிந்தர் சிங் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால், சுமார் 2 வாரங்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இதேபோன்று கவர்னர் வி.பி. சிங் பத்னோரும் ராஜினாமா கடிததை ஏற்றுக் கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் 8 இடங்களிலே வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, சித்து தனது உள்ளாட்சி துறையை மோசமாக கையாண்டதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியிருந்தார். 

இதையடுத்து, தனக்கு தரப்பட்ட புதிய அமைச்சர் பதவியை விரும்பாத சித்து, நீண்ட நாட்களாக பதவி ஏற்காமலே இருந்து வந்தார். தொடர்ந்து, அமைச்சரவை கூட்டங்களையும் அவர் தவிர்த்து வந்தார். இதைத்தொடர்ந்தே, கடந்த மாதம் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

முன்னதாக, மாநிலங்களவை தேர்தல் நடந்து முடிந்த பின்பு கடந்த ஜூன் 6ஆம் தேதி இந்த புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியானது. பஞ்சாப் முதல்வர் அமிரிந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில், உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நவ்ஜோத் சித்துவுக்கு மின்சாரத்துறை மாற்றம் செய்யப்பட்டது.

மேலும், அவர் கைவசம் இருந்த சுற்றுலாத்துறை இலாக்காவும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10-ம்தேதி சித்து ராஜினாமா செய்தார். இது பஞ்சாப் அரசியலிலும் காங்கிரஸ் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 அவரது ராஜினாமாகடிதத்தை ஏற்பதில் முதல்வர் தாமதம் செய்து வந்த நிலையில் தற்போது சித்துவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................