This Article is From Jun 29, 2019

புனேவில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் உயிரிழப்பு!

Pune wall collpase: இந்த விபத்து சம்பவமானது புனே கொந்துவா பகுதியில் நிகழ்ந்துள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அடுத்து இருந்த சேரியில் சுவர் கீழே விழுந்து, நிறுத்தப்பட்டிருந்த கார்களை கீழே இறக்கியது.

புனேவில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் உயிரிழப்பு!

Pune wall collapse: சுவர் இடிந்து விழந்ததில் பல கார்களும் சிக்கியுள்ளன.

ஹைலைட்ஸ்

  • Among the dead are 4 children, one woman; wall collapsed after heavy rain
  • Apartment complex wall crashed into labourers' homes in Kondhwa area
  • NDRF, fire department and police are at the site of the accident
Pune:


புனேவில் தொடர்ந்து கன மழை பெய்து வந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து, நேற்று முன்தினம் கன மழை பெய்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73.1 மிமீ மழை பெய்துள்ளது. இதனிடையே, மகராஷ்டிராவில் தொடர் மழை காரணமான விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில், நேற்று காலை முதல் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில், புனேவில் கடும் மழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதன் அருகே, குடிசை பகுதி இருக்கிறது. அங்கு பெய்து வரும் கன மழை காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பின் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து, குடிசை பகுதியில் விழுந்தது. 
 

aggiq0no

இதில், 4 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் பல கார்கள் சிக்கின. 

தகவலறிந்து விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மழை காரணமாக, மும்பையிலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், இன்று காலை மும்பை செம்பூர் அருகே சுவர் இடிந்து ஆட்டோ மீது விழந்தது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. 
 

(With inputs from ANI and PTI)

.