ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்!! 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ட்ராலின் ஹரி – பாரி என்ற இடத்தில் வைத்து என்கவுன்ட்டர் நடந்தது.

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்!!  2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

புல்வாமாவில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Srinagar:

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ட்ராலின் ஹரி – பாரி என்ற இடத்தில் வைத்து என்கவுன்ட்டர் நடந்தது.

ட்ரால் பகுதியில் தீவிரவாதிகள் உள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தன. இதையடுத்து, வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல போலீசின் ட்விட்டர் பக்கத்தில், ‘என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. முக்கிய தகவல்கள் கிடைத்தால் அதனை தெரிவிப்போம்' என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, பந்திப்போரா போலீசார், துணை ராணுவத்தினர் மற்றும் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். இதில் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புகளுக்கு அனைத்து வித உதவிகளையு செய்யும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர். கைதானவர்கள், படகுகள் மூலமாக கடத்துதல், வெடி பொருட்களை கொண்டு செல்வதற்கான உதவிகளை செய்தல் போன்றவற்றை தீவிரவாதிகளுக்கு செய்து கொடுத்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More News