புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் மறைவு!

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் காலமானார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் மறைவு!

ஜானகிராமன் உடலுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்


புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் காலமானார். 

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் திமுக-வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான ஆர்.வி.ஜானகிராமன், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி இயற்கை எய்தினார். 

அவர் திமுக சார்பில், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியில் இருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1989 ஆம் ஆண்டு முதல் 1991 வரை புதுச்சேரியின் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தார் ஜானகிராமன். அதேபோல 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதல்வராகவும் அவர் இருந்தார். 

அவரது உடலுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆர்.வி.ஜானகிராமனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது உடல் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்படும்” என்று கூறினார். 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................