சாக்கடையை சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர்… வைரலான வீடியோ!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அம்மாநிலத்தின் நெல்லித்தோப்புப் பகுதியில் ஒரு சாக்கடை அடைப்பைத் தானே இறங்கி சுத்தம் செய்துள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS

நெல்லித் தோப்புப் பகுதியில் சாக்கடையை சுத்தம் செய்யும் நாராயணசாமி


New Delhi: 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அம்மாநிலத்தில் இருக்கும் ஒரு சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சுத்தம் செய்வதை வீடியோவாக எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நாராயணசாமி. அது தற்போது வைரலாகியுள்ளது.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு சுத்தம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ‘ஸ்வச்சத்தா ஹை சேவா’ என்கிற புதியத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம், அரசு பிரதிநிதிகள், பிரபலங்கள் மற்றும் மக்களை நாட்டின் சுகாதாரத்துக்காக பாடுபட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதையொட்டி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அம்மாநிலத்தின் நெல்லித்தோப்புப் பகுதியில் ஒரு சாக்கடை அடைப்பைத் தானே இறங்கி சுத்தம் செய்துள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்து தன் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார்.

பல நேரங்களில் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள், மிகவும் சுகாதாரமான இடத்தில் சுத்தம் செய்துவிட்டு, கேமராவுக்கு மட்டும் போஸ் கொடுப்பர். ஆனால், உண்மையிலேயே மிக அசுத்தமான ஒரு சாக்கடையை சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வரின் செயல் பலரை கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் அவருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................