This Article is From Nov 15, 2018

கஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது: முதல்வர் நாராயணசாமி

மாவட்ட அதிகாரிகளுக்கு வெள்ள நிவாரண பொருட்களை தயாராக வைத்திருக்கும்படியும் தொற்று நோய் தடுப்பு மருந்துகள் கையிருப்பு வைத்திருக்கும் படியும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

கஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது: முதல்வர் நாராயணசாமி

கஜா புயல் பாம்பனுக்கும் - கடலூருக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nagapattinam:

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காரைக்காலில் அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்ததித்த அவர்,

அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவையில் இருந்து பேரிடர் மீட்புகுழு காரைக்காலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் படிக்க - "கஜா புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் இன்று பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து!"

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். அதிகாரிகள் யாரும் விடுமுறையில் செல்லாமல் மக்கள் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் குடிசை வாழ் மக்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

மேலும் படிக்க - "கஜா புயல் காரணமாக புதுவையில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு"

கஜா புயலானது வரும் நவ.15 ஆம் தேதி பாம்பனுக்கும் - கடலூருக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

.