தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் தள்ளுபடி; உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டம்!

இந்தப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறையினர், போராட்டக்காரர்களை சம்பவ இடத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். 

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் தள்ளுபடி; உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், “வெளிப்படையான நியாயமான விசாரணை வேண்டும்” என்றும், “உச்ச அநீதி” என்றும் பதாகைகள் ஏந்தியிருந்தனர். 

New Delhi:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர், ஒரு பெண் பாலியல் புகார் கூறினார். நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பிய இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு விசாரணையை நேற்று முடித்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் டெல்லியில் இருக்கும் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு எதிரில் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராட்டத்தில் குதித்தன. 

இந்தப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறையினர், போராட்டக்காரர்களை சம்பவ இடத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். 

“இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அநீதியாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூட விசாரணைக் குழு, தனது அறிக்கையை தரவில்லை. அது மிகவும் தவறானது. இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதும், பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது” என்று சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பிரிந்தா காரத் கருத்து கூறியுள்ளார். 

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், “வெளிப்படையான நியாயமான விசாரணை வேண்டும்” என்றும், “உச்ச அநீதி” என்றும் பதாகைகள் ஏந்தியிருந்தனர். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி பெண் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதினார். இந்த குற்றச்சாட்டை ரஞ்சன் கோகாய் மறுத்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க 2 பெண்கள் உள்பட 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டது. 

'ஏப்ரல் 19-ம் தேதி அளிக்கப்பட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகார் குறித்து விசாரிக்க மூவர் குழு அடைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையின் முடிவில் நீதிபதி கோகாய் மீதான புகாருக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது' என்று விசாரணை முடித்த பின்னர் உச்ச நீதிமன்ற தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் புகார் அளித்த பெண், இந்த விவாகரம் குறித்து மேலும் அறிக்கை மூலம் தெரிவிக்கையில், ‘நலிந்த பிரிவினருக்கு நாம் நாட்டில் இருக்கும் அமைப்புகள், நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை இழக்கும் நிலையில் நான் இருக்கிறேன்' என்றுள்ளார். அந்தப் பெண் சென்ற வாரம் மூவர் குழு மீது அதிருப்தி தெரிவித்து, விசாரணையிலிருந்து விலகினார்.

மூவர் குழவில் நீதிபதி எஸ்.ஏ.போட்க், நீதிபதி இந்து மல்கோத்ரா மற்றும் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நேற்று மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்த போது, தலைமை நீதிபதி கோகாய் அமர்வின் முன் ஆஜரானார்.

இந்த மொத்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி கோகாய், ‘என் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாரை முற்றிலும் மறுக்கிறேன். நான் பல முக்கிய வழக்குகளை விசாரிப்பதால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்படுடள்ளேன். இந்த புகார்களுக்குப் பின்னர், நீதித் துறையை கவிழ்க்க ஒரு மிகப் பெரிய சக்தி இருக்க வேண்டும். நீதித் துறையின் சுதந்திரம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது' என்று விளக்கம் அளித்தார்.

More News