'பத்தே நாட்களில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடித்து விடும்' - பிரதமர் மோடி பேச்சு!!

அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே 3 முறை போரில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின்போது, புல்வாமாவில் துணை ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் அபாயம் உண்டானது.

'பத்தே நாட்களில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடித்து விடும்' - பிரதமர் மோடி பேச்சு!!

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுகப்போரை நடத்தி வருகிறது என்று மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

New Delhi:

பத்தே நாட்களில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடித்து விடும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே 3 முறை போரில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின்போது, புல்வாமாவில் துணை ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் அபாயம் உண்டானது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் பேசியதாவது-

பாகிஸ்தான் 3 முறை நம்முடன் நடத்திய போரில் தோல்வி அடைந்திருக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்றால் நம்முடைய படைகளுக்கு 7 முதல் 10 நாட்களுக்கு மேல் கால அவகாசம் தேவைப்படாது. 

புதுமையான சிந்தனைகள் இந்தியாவில் உருவாகின்றன. இதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். 

2016-ல் நாம் பாலக்கோட் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதலை நடத்தினோம். இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது நம்முடைய புதிய சிந்தனைகளுக்கு ஓர் உதாரணம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே, கடந்த 1947, 1965 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் போர் ஏற்பட்டது. 1999-ல் கார்கில் யுத்தம் நடந்தது. இவை அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை நினைவுபடுத்திப் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதிகளை தூண்டி விடுவதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுகப் போரை நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார். 

Listen to the latest songs, only on JioSaavn.com