This Article is From Apr 26, 2020

“கொரோனா தொற்றுக்கு எதிரான தேசத்தின் போராட்டம் என்பது மக்களின் உந்துதல்”: பிரதமர் மோடி

நகரங்களிலிருந்தாலும், கிராமங்களிலிருந்தாலும் தொற்று நோய்க்கு எதிரான போராட்டக்களத்தில் மக்கள் ஈடுபடுவதை நாம் அனைத்து இடங்களிலும் காணலாம்

“கொரோனா தொற்றுக்கு எதிரான தேசத்தின் போராட்டம் என்பது மக்களின் உந்துதல்”: பிரதமர் மோடி
New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி 64 வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், கொரோனா தொற்றுக்கு எதிரான தேசத்தின் போராட்டம் என்பது மக்களின் உந்துதல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நகரங்களிலிருந்தாலும், கிராமங்களிலிருந்தாலும் தொற்று நோய்க்கு எதிரான போராட்டக்களத்தில் மக்கள் ஈடுபடுவதை நாம் அனைத்து இடங்களிலும் காணலாம் என்று அவர் கூறியுள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் சில சிறப்பம்சங்கள்;

 • ஏழைகளுக்கு உணவளித்தும், முககவசங்களை தயாரித்தும், தொற்றுக்கு எதிரான போருக்கு நிதியளிக்கவும் தங்களது நிலங்களை  விற்றும், ஓய்வூதியத்தினை வழங்கியும் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.
 • தேசிய அளவில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தினை  மக்கள் மற்றும் நிர்வாகம் இரண்டும் இணைத்து முன்னெடுத்துள்ளனர். தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு சிப்பாயாகத் தனது போராட்டத்தினை நடத்துகிறான். தேசத்தின் கடின உழைப்பாளியான விவசாயிகள் நாட்டில் யாரும் பசியுடன் இல்லை என்பதை உறுதி செய்கிறார்கள்.
 • அரசு உருவாக்கியுள்ள Covidwarriors.gov.in என்ற டிஜிட்டல் தளத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 1.15 கோடி பேர் இணைந்துள்ளனர். நீங்களும் இதில் இணைந்து கொரோன தொற்றுக்கு எதிரான போர் வீரனாக மாற வேண்டும்.
 • வணிகங்கள், அலுவலக கலாச்சாரம், கல்வி, மருத்துவத் துறை என அனைத்தும் கொரோனா தொற்றுக்குப் பிறகு புதிய மாற்றங்களுக்குத் தாயாராகியுள்ளன.
 • கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த முழு முடக்க நடவடிக்கை காலக்கட்டத்தில், வீட்டு பணியாளர்கள், கடை பணியாளர்கள், ஓட்டுநர்கள் என ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் நாம் தற்போது உணர்ந்துள்ளோம்.
 • தற்போதைய நிலையில் இந்தியா மற்ற நாடுகளுடன் மருந்துகளை பகிர்ந்துகொள்ள அவசியமில்லை. ஆனால், இந்தியா தனது சுய நலன்களுக்கு அப்பாற்பட்டு, உலகின் மனிதாபிமான தேவைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளுக்கு மருந்துகளை வழங்க முன்வந்துள்ளது.
 • மற்ற நாடுகளின் தலைவர்களுடன் நான் பேசும்போது மருந்துகள் வழங்கியதற்காக இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூறுகிறார்கள். நமது நாட்டின் ஆயுர்வேதா மற்றும் யோகா குறித்தும் பிற நாடுகளில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
 • கொரோன தொற்றானது நம்முடைய வாழ்க்கையில் முககவசத்தினை ஒரு பகுதியாக மாற்றிவிட்டது. முககவசம் அணிந்தவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர் என்கிற கருத்திலிருந்து, முககவசம் என்பது நாகரிக சமூகத்தின் அடையாளம் என்கிற கருத்தாக கொரோன மாற்றியுள்ளது.
 • பொதுவெளியில் எச்சில் உமிழ்வது என்பது ஒரு தவறான பழக்கம் என்பதை கொரோனா தொற்று ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாம் எச்சில் துப்புவதைக் கைவிட வேண்டும். இவ்வாறு செய்வது அடிப்படை சுகாதாரத்தினை அதிகரிப்பதோடு கொரோனா தொற்றுக்கு எதிரான போரையும் வலுப்படுத்தும்.
 • இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை இவ்வளவு நெருக்கடிகளைச் சந்திக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஈத் காலத்திற்குள் உலகம் கொரோனா வைரஸிலிருந்து விடுபட வேண்டுமென்று ஜெபிப்போம். மேலும், நாம் தொடர்ந்து கவனமாகவும், சமூக விலகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும்.
 • கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களைத் தாக்குபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது.

என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

.