This Article is From Jun 09, 2019

தீவிரவாதம் ஒருபோதும் இலங்கையின் உத்வேகத்தை குறைக்காது : பிரதமர் நரேந்திர மோடி

லங்கையுடன் எப்போதும் தோளோடு தோளாக இந்தியா இருக்கும். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறேன்  எனத் தெரிவித்தார்

தீவிரவாதம் ஒருபோதும் இலங்கையின் உத்வேகத்தை குறைக்காது : பிரதமர் நரேந்திர மோடி

குண்டு வெடிப்பிற்கு பின் பிரதமர் மோடி இலங்கைக்கு சென்றுள்ளார்.

New Delhi:

இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக தேவாலயத்தில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி பதவியேற்ற முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு சென்றுள்ளார். 

இலங்கை தலைநகர் கொழும்பு நகருக்கு விமானம் மூலம் வந்தார். அவரை விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்கே வரவேற்றார்.

அதன்பின் அங்கிருந்து அதிபர் மாளிகைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள புனித அந்தோனி தேவாலயத்துக்கு பிரதமர் மோடி சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில் “இலங்கை மீண்டு எழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கோழைத்தனமான செயல்கள் இலங்கையின் உத்வேகத்தை தோற்கடிக்க முடியாது. இலங்கையுடன் எப்போதும் தோளோடு தோளாக இந்தியா இருக்கும். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறேன்  எனத் தெரிவித்தார்.

அதன்பின் அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி வந்தபோது லேசாக மழை தூறியது. அதன்பின் அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி அசோக மரக்கன்று ஒன்றினை நட்டு வைத்தார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், “ மழை வந்தாலும் வெயில் அடித்தாலும் உங்களுடன் இருப்போம், கொழும்பு அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். 

அதிபர் மைத்திரி சிறிசேனா அளிக்கும் மதிய விருந்தில் கலந்து கொள்கிறார்.


 

.