தாயை விமர்சித்த காங்கிரஸ்… பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

ராஜ் பாப்பர் சில நாட்களுக்கு முன்னர் பேசுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதை, மோடியின் தாயின் வயதுடன் ஒப்பிட்டுப் பேசினார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
தாயை விமர்சித்த காங்கிரஸ்… பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

ராஜ் பாப்பர் சில நாட்களுக்கு முன்னர் பேசுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதை, மோடியின் தாயின் வயதுடன் ஒப்பிட்டுப் பேசினார்

Chhatarpur, Madhya Pradesh: 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயை கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸின் ராஜ் பாப்பர் சில நாட்களுக்கு முன்னர் பேசியிருந்தார். அதற்கு மோடி, மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

ராஜ் பாப்பர் சில நாட்களுக்கு முன்னர் பேசுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதை, மோடியின் தாயின் வயதுடன் ஒப்பிட்டுப் பேசினார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. பாஜக தரப்பும் பாப்பருக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட மோடி ராஜ் பாப்பரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உரையாற்றினார். ‘ஒருவருக்கு எப்போது தர்க்கமான விஷயங்கள் குறித்துப் பேச தெரியவில்லையோ, அப்போது அவர், மற்றவர்களின் தாயை இழிவு செய்து தான் பேசுவார்' என்று பாப்பரை மறைமுகமாக தாக்கிப் பேசினார் மோடி.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘எனக்கு எஜமானர்கள் இந்நாட்டின் 125 கோடி மக்கள்தான். என்னை மறைமுகமாக யாரும் கட்டுப்படுத்தவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் வங்கியின் கதவுகள் பணக்காரர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. எனது ஆட்சியிலோ இளைஞர்களுக்காக அது திறந்துவிடப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய பிரதேசத்தின் ஆட்சி அதிகாரத்திலிருந்து காங்கிரஸை மக்கள் துரத்தியடித்தனர். அந்தக் கட்சி குடும்ப அரசியலையும், பிரித்தாலும் அரசியலையும் பின்பற்றியதே அதற்குக் காரணம்' என்று விமர்சனம் செய்தார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................