புதுச்சேரி ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி சென்னையில் கைது..!

புதுச்சேரியில் ஏடிஎம் மெஷின் மூலம் மோசடி செய்து பல கோடி ரூபாய் கொல்லையடித்த கும்பலின், முக்கியப் புள்ளி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
புதுச்சேரி ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி சென்னையில் கைது..!

புதுச்சேரியில் ஏடிஎம் மெஷின் மூலம் மோசடி செய்து பல கோடி ரூபாய் கொல்லையடித்த கும்பலின், முக்கியப் புள்ளி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக-வின் முன்னாள பிரமுகர் சந்துருஜி, மற்றும் அவரின் கும்பல் புதுச்சேரியில் இருக்கும் ஒரு ஏடிஎம் மெஷினை எடுத்துவிட்டு போலியான ஒரு மெஷினை வைத்தது. இதையடுத்து, அதில் பணம் எடுக்க கார்டை நுழைத்தவர்களில் சிவிவி பின் நம்பரை எடுத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் வங்கி கணக்கில் இருக்கும் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து எடுத்தள்ளனர். கொல்லையடித்த பணத்தை அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர் குற்றவாளிகள். இந்த சம்பவம் குறித்து மார்ச் மாதம் போலீஸுக்குத் தெரிய வந்தது. 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சந்துருஜி உள்ளிட்ட கும்பலைப் பிடிக்க போலீஸ் முயன்று வந்தது. இந்நிலையில், நேற்று சந்துருஜியை சென்னை விமானநிலையத்தில் கைது செய்துள்ளது காவல் துறை. 

சந்துருஜி, அதிமுக-வின் உறுப்பினராக இருந்தவர். இந்த விவகாரம் தொடர்பாக விவரம் தெரிந்தவுடன் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். (इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................