தியேட்டர்களில் உணவு பொருட்களை எம்.ஆர்.பி. ரேட்டுக்கு அதிகமாக விற்றால் நடவடிக்கை

335 தியேட்டர்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 114 தியேட்டர் கேன்டீன் உரிமையாளர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தியேட்டர்களில் உணவு பொருட்களை எம்.ஆர்.பி. ரேட்டுக்கு அதிகமாக விற்றால் நடவடிக்கை

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்களில் உள்ள கேன்டீன், உணவகம் உள்ளிட்டவைகளில் எம்.ஆர்.பி.க்கு அதிகமாக உணவுப்பொருள், குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தொழில்துறை ஆணையர். இரா. நந்த கோபால் இ.ஆ.ப. அவர்களால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து கடந்த 06.09.18 மற்றும் 07.09.18 ஆகிய இரு நாட்களில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி 335 தியேட்டர்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், குறிப்பிட்ட விலைக்கு (எம்.ஆர்.பி. ரேட்டுக்கு) அதிகமாக விற்ற 72 தியேட்டர் கேன்டீன் உரிமையாளர்கள் மீதும், பாக்கெட் பொருட்களின் மீது தயாரிப்பாளர் முழு முகவரி, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை, பொருள் அடைக்கப்பட்ட நாள், உபயோகிக்க வேண்டிய காலம் போன்ற விவரங்களை அச்சிடாமல் பொட்டலங்களை விற்பனை செய்த 38 தியேட்டர் உரிமையாளர்கள் மீதும், இதர எடையளவு சட்ட விதிகள் மீறல் காரணமாக 4 நிறுவனங்கள் என மொத்தம் 114 தியேட்டர் கேன்டீன் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................