கர்ப்பிணி பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர் கைது

இது தெளிவான ஒரு இனவெறி மற்றும் இஸ்லாமியத்தை குறித்த தவறான பயத்தினால் உருவான சச்சரவு” என்று ஆஸ்திரேலிய இஸ்லாமிய கவுன்சில் கூட்டமைப்பு ரத்தேப் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர் கைது

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை முடிந்து வெளியேறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Australia:

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் காபி ஷாப் ஒன்றில் 43 வயதான ஒரு நபர் கர்ப்பிணி பெண் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அப்பெண் இஸ்லாமிய மதத்தை பற்றி தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த நபர் 32 வாரங்களான கர்ப்பிணிப் பெண்ணை சரமாரியாக தாக்குகிறார். 

வெறித்தனமான தாக்குதலுக்குப் பின் அந்த பெண் மயங்கி விழுகிறார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. காவல்துறையினர் “உண்மையான உடல் ரீதியான தாக்குதல்” என்பதால் அடித்த நபருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. ஆஸ்திரேலிய இஸ்லாமிய கவுன்சில் கூட்டமைப்பு “பாதிக்கப்பட்டவர் அவரது நண்பர்களிடம் இஸ்லாமியத்தை எதிர்த்து பேசியதாக” கூறியுள்ளது. 

“இது தெளிவான ஒரு இனவெறி மற்றும் இஸ்லாமியத்தை குறித்த தவறான பயத்தினால் உருவான சச்சரவு” என்று ஆஸ்திரேலிய இஸ்லாமிய கவுன்சில் கூட்டமைப்பு ரத்தேப் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை முடிந்து வெளியேறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

More News