This Article is From Feb 15, 2019

இங்கிலாந்திடம் அனுமதி கேட்கும் ஐஎஸ்ஐஎஸ்-ல் சேர்ந்த 19 வயது கர்ப்பிணி பெண்!

சிரியாவில் உள்ள அகதிகள் முகாமிலிருந்து பேசிய பேகம், தற்போது 19 வயதான அவர் தன் இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டதாகவும், தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் குழந்தையின் நலனுக்காக நாடு திரும்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இங்கிலாந்திடம் அனுமதி கேட்கும் ஐஎஸ்ஐஎஸ்-ல் சேர்ந்த 19 வயது கர்ப்பிணி பெண்!

ஷமிமா பேகம் 15 வயதில் லண்டனிலிருந்து தப்பிச்சென்று ஐஎஸ்ஐஎஸ்-ல் இணைந்தார்.

London:

2015ல் லண்டனிலிருந்து தப்பிச் சென்று ஐஎஸ்ஐஎஸ்-ல் இணைந்தார் ஒரு இங்கிலாந்து வாழ் பங்களாதேஷ் பெண் கர்ப்பமாக உள்ள அவர், தற்போது  உடல் நலன் கருதி லண்டன் வர நினைக்கிறார். 

ஷமிமா பேகம் 15 வயதில் லண்டனிலிருந்து தப்பிச்சென்று ஐஎஸ்ஐஎஸ்-ல் இணைந்தார். இளைஞர்களிடம் இஸ்லாமியத்தையும், தீவிரவாதத்தையும் பரப்புவதை வேலையாக கொண்டிருந்தார்.

சிரியாவில் உள்ள அகதிகள் முகாமிலிருந்து பேசிய பேகம், தற்போது 19 வயதான அவர் தன் இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டதாகவும், தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் குழந்தையின் நலனுக்காக நாடு திரும்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். 

வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஐஎஸ்ஐஎஸ் முகாமில் நோய் தோற்று ஏற்பட்டதாகவும், குழந்தையை காக்க இங்கிலாந்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

3o8g6m2g

"எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். அதனால் இங்கிலாந்து திரும்பி நான் என் வாழ்க்கையை அமைதியாக வாழ விரும்புகிறேன். என் குழந்தைக்காக நான் என்ன தேவையோ அதனை செய்ய தயார்" என்று கூறியுள்ளார்.

பேகம் தனது முதல் இரண்டு குழந்தைகளை ஊட்டசத்து குறைபாட்டால் இழந்தார். பேகம் தப்பிச்சென்ற ஒரே வருடத்தில் அவரது பெற்றோர்கள் இறந்து போயினர். 

மேலும் பேகம், ஐஎஸ்ஐஎஸ்-ல் இணைந்ததை மறைக்கவில்லை. 27 வயதான டச்சுக்காரரை திருமணம் செய்ததாகவும், அவர் திருமணமான 10வது நாளில் இஸ்லாமுக்கு மாறி ஐஎஸ்ஐஎஸ்-ல் இணைந்ததாகவும் கூறினார். 

வடக்கு சிரியா முகாமில் உள்ள 39,000 பேரில் இவரும் ஒருவர். தற்போது இங்கிலாந்துக்கு வர கோரும் பேகமை இங்கிலாந்து அனுமதிக்க மறுத்துள்ளது.