புனேவில் பிடிபட்ட அரிய வகை வேட்டை மீன்!

புனேயில் உள்ள பாவானா அணையின் அருகே பிடிபட்ட வினோத மீன் ஒன்று அங்குள்ள மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பு துறை அதிகாரிகள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
புனேவில் பிடிபட்ட அரிய வகை வேட்டை மீன்!
Pune: 

புனேயில் உள்ள பாவானா அணையின் அருகே பிடிபட்ட வினோத மீன் ஒன்று அங்குள்ள மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பு துறை அதிகாரிகள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு அமெரிக்காவை தனது பூர்வீகமாக கொண்ட இந்த அரிய வகை மீன் ‘அலிகேட்டர் கர்' எனவும், பிடிபட்ட போது 17 சென்டிமீட்டர் நீளமும் 2.5 கிலோ எடையும் கொண்டிருந்தது.

இந்த வகை மீன் மற்ற மீன்களைப் போல் இல்லாமல் சக மீன்களை தின்றே உயிர்வாழும் தன்மை கொண்டதால் அந்த அணையின் மற்ற மீன்கள் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

‘நாங்கள் இதையடுத்து மீனவர்களின் கவனத்திற்கு இச்சம்பவத்தை பற்றி அறிவித்தோம். மேலும் மீன்களை குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்களை கொண்டு அந்த மீன் 'அலிகேட்டர் கர்' என்னும் வகைதானா என்று உறுதி செய்துள்ளோம், அவர்களும் அதை உறுதி செய்துள்ளார்கள் ' என பாவானா அணையின் செக்ஷன் இஞ்சினியர் ஏ.எம். காட்வால் கூறினார்.

‘இது மிகவும் அரிய வகை மீன் இயற்கையாகவே இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை. யாரேனும் ஒருவர் இந்த மீனை இங்கு விட்டு சென்றிருக்கலாம்' என மீன்வளத்துறை யின் மேம்பாட்டு துறை அதிகாரி ஜனக் போசாலே தெரிவித்தார்.

மேலும் அவர் இந்த வகை மீன்களால் அங்குள்ள பன்மைதன்மை பாதிக்கப்படலாம் எனக் கூறினார்.

இந்த வகை மீன் எல்லா வகை தண்ணீர்களுக்கும் தன்னை மாற்றிக் கொண்டு வாழக்கூடியது. இந்த வகை மீன்கள் பொறுமையாக காத்திருந்து தனக்கான இரையை வேட்டையாடும் என்பது கூடுதல் தகவல்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................