This Article is From Jul 19, 2019

ஆன்லைன் தளங்களின் உள்ளடக்கம் குறித்து தேவைப்பட்டால் முடிவு எடுப்போம்

சினிமா மக்கள் ஊடகம் அது அப்படியே இருக்கும். நாங்கள் எதையும் குறுக்கிட மாட்டோம். நல்ல படங்களை உருவாக்கி அவற்றை மக்களுக்கு கிடைக்கச் செய்வோம்” என்று கூறினார்.

ஆன்லைன் தளங்களின் உள்ளடக்கம் குறித்து தேவைப்பட்டால் முடிவு எடுப்போம்

டெல்லியில் நடந்த ஜாக்ரான் திரைப்பட விழாவில் பேசினார்.

New Delhi:

நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற ஆன்லைன் தளங்களின்  உள்ளடக்கம் குறித்து எழும் கருத்துகள் குறித்து இந்திய அரசாங்கம் அறிந்திருக்கிறது. தேவைப்பட்டால் அதன் பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து அதன் பின்னரே ஒழுங்கு முறை குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த ஜாக்ரான் திரைப்பட விழாவில் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் சினிமா மக்களின் ஊடகம் என்றும் அரசாங்கம் அதற்கு இடையூறாக எதையும் அனுமதிக்காது என்று கூறினார்.

“நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் குறித்து கவலைகள் எழுகின்றன. ஆன்லைனின் வெளியிடுவதால் தணிக்கை இல்லாததால் பலவித திரைப்படங்களும் வெளியிடப்படுகின்றன. இது வெளிப்படையாக விவாதிக்கபட வேண்டிய விஷயம். ஆனால் இது குறித்த எந்த முடிவுகளையும் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே எடுப்போம்” என்று கூறினார்.

“சினிமா மக்கள் ஊடகம் அது அப்படியே இருக்கும். நாங்கள் எதையும் குறுக்கிட மாட்டோம். நல்ல படங்களை உருவாக்கி அவற்றை மக்களுக்கு கிடைக்கச் செய்வோம்” என்று கூறினார்.

வெளிநாடுகளின் பாலிவுட் படங்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகக் கூறினார். சினிமா நம் வாழ்வின் ஒரு பகுதி இது எங்களுக்கு நிறைய விஷயங்களைக் கொடுத்து மக்களை இணைத்துள்ளது. சினிமாவின் சக்தி மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். 

.