அடுத்தடுத்து நிகழும் பாஜக தலைவர்கள் மரணம் : எதிர்கட்சிகள் தீயசக்தியை ஏவியுள்ளனர் -பிரக்யா சிங்

இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறியது உண்மை என்றே தோன்றுகிறது. பாஜக தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர் எனக் கூறினார்.

அடுத்தடுத்து நிகழும் பாஜக தலைவர்கள் மரணம் : எதிர்கட்சிகள் தீயசக்தியை ஏவியுள்ளனர் -பிரக்யா சிங்

எதிர்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகின்றன.

New Delhi:

பாஜக தலைவர்கள் மனோகர் பாரிக்கர், சுஸ்மா சுவராஜ், அருண் ஜெட்லி  என அடுத்தடுத்து இறந்ததற்கு காரணம் எதிர்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துவதாக விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சுவாசக் கோளாறு காரணமாகவும் அதற்கு முன்னதாக சுஷ்மா சுவராஜ் உடல் நலக் குறைவாலும், மனோகர் பாரிக்கர் புற்று நோயினாலும் காலமானர்கள். 

இந்நிலையில் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக போபால் எம்.பி. பிரக்யா சிங் தகூர் பேசிய போது:

Newsbeep

தேர்தல் நேரத்தில் மகாராஜ் ஜி என்னிடம் , இது மிகவும் மோசமான நேரம், பாஜகவுக்கு எதிராகவும் உங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிர்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகின்றன. நீங்கள் கவனமாக இருக்க வேண்டுமென எச்சரித்தார். நான் அதன்பிறகு அதை மறந்து விட்டேன். இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறியது உண்மை என்றே தோன்றுகிறது. பாஜக தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர் எனக் கூறினார். 

பிரக்யா சிங்கின் பேச்சை மத்திய பிரதேச அமைச்சரும் காங்கிரஸ்  மூத்த தலைவருமான திக்விஜயா சிங்கின் மகன் ஜெயவர்தன் சிங் “நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது போன்ற அறிக்கையை வெளியிட்டது மிகவும் துரதிஷ்டவசமானது. அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ்  ஆகிய அனைவரையும் அறிவோம்.  அவர்களுக்கு எதிர்கட்சிகள் சூனியம் வைத்ததாக குற்றம் சாட்டுவது துரதிஷ்டவசமானது அவர் தனது வார்த்தையை திரும்ப பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.