பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு கொடூரம்: கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக்கொலை!

கடந்த 2 நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு கொடூரம்: கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக்கொலை!

சாலையோரம் இளம்பெண் பிணமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது.


Coimbatore: 


கோவையில் 2 நாட்களாக காணாமல் போன கல்லூரி மாணவி ஒருவர், கொடூரமாக கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த பிரகதி (19) என்ற மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த பிரகதி கடந்த 2 நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையில், காணாமல் போன மாணவி கடைசியாக கல்லூரியில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல எண்ணியுள்ளார். அப்போதே அவர் காணாமல் போயிருக்க வேண்டும் என தெரிகிறது.

இந்நிலையில், சாலையோரம் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் அது காணாமல் போன மாணவி பிரகதி என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து கைப்பற்றிய சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் என்டிடிவியிடம் கூறியதாவது, மாணவி பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாரா என்பதை பிரேத பரிசோதனை முடிவுகளை வைத்தே கூற முடியும் என்றார். மேலும், கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும், வரும் ஜூன் 13ஆம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலிடம் சிக்கி 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனிடையே இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் துணிச்சலாக காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவையில் கடந்த வாரம் 6 வயது சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததைதொடர்ந்து, கல்லூரி மாணவியின் மரணம் கோவை வட்டார மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................