This Article is From Aug 26, 2018

என்.டி.டி.வி-யின் #IndiaForKerala நிவாரண உதவி தொடர் நேரலை: பிரபலங்களின் கருத்து

மனிதநேயத்துக்கு எந்த மதமும் இல்லை. நாம் கேரளாவுக்காக கவனம் செலுத்த வேண்டும். அரசியலுக்காக அல்ல என்று தொழில் அதிபர் பிரதீப் பவானி கோரிக்கை வைத்துள்ளார்

என்.டி.டி.வி-யின் #IndiaForKerala நிவாரண உதவி தொடர் நேரலை: பிரபலங்களின் கருத்து
New Delhi:

என்.டி.டி.வி-யின் #IndiaForKerala நிவாரண உதவி தொடர் நேரலை: பிரபலங்களின் கருத்து

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் கனமழை பெய்து பெரும் சேதாரத்தை விளைவித்துள்ளது. இதற்கு நிவாரண நிதியுதவி சேகரிக்கும் நோக்கில் என்.டி.டி.வி-யின் #IndiaForKerala தொடர் நேரலை நடத்தப்பட்டது. இதில் அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மிக அதிகமாக நிதியுதவி செய்தது மட்டுமல்லாமல், மக்களையும் நிதியுதவி செய்யுமாறு கோரினர்.

அப்போது சொல்லப்பட்ட முக்கிய கருத்துகள்:

1. ஒவ்வொரு குடிமகனுக்குமான கடமை இது. நம்மால் முடிந்த அனைத்தையும் இச்சமயத்தில் செய்தாக வேண்டும். எந்த உதவியும் சிறியது அல்ல என்று மேகாலயா முதல்வர் கான்ரட் சங்மா பேசியுள்ளார்.

2. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு இந்த நாடு உதவி செய்ய வேண்டும். கேரளா மறுபடியும் எழுந்து நிற்க உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யுங்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.

3. எங்களுக்கு விவசாயக் கடன் வேண்டும். மீண்டும் உள்கட்டமைப்பு வசதிகளை நாங்கள் ஏற்படுத்த வேண்டும். இப்போதும் மக்கள் பலர் அவர்களின் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் இருக்கின்றனர். சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை கடுமையாக பாதிப்படைந்துள்ளது என்றுள்ளார் கேரள நிதித் துறை அமைச்சர் தாமஸ் ஐசக்.

4. சேதாரத்தின் அளவை நாம் கணக்கிடவே முடியவில்லை. வெள்ள நீர் வற்றியவுடன், சுகாதாரம் குறித்து நிறைய சிக்கல்கள் வரும். நிதியுதவி செய்வது தான் நம்மால் முடிந்த குறைந்தபட்ச உதவி. ஆனால், ஒரு குடிமகனாக நாம் அதைவிடவும் அதிகம் செய்ய வேண்டும் என்று கவிஞர் ஜாவேத் அக்தர் கூறியுள்ளார்.

5. அக்தர் மேலும், பஞ்சம் அல்லது வறுமை. நம் நாட்டில் மிகச் சாதரணமாக நடக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. நம் நாட்டின் பெரும்பான்மை நதிகள் இறந்துவிட்டன. ஒரு பேரழிவு நடந்தால்தான் நாம் விழித்துக் கொள்கிறோம். இது சம்பந்தமான பொறுப்பு மற்றும் மேலாண்மை திறம்பட செயல்பட வேண்டும் என்றுள்ளார்.

6. மனிதநேயத்துக்கு எந்த மதமும் இல்லை. நாம் கேரளாவுக்காக கவனம் செலுத்த வேண்டும். அரசியலுக்காக அல்ல என்று தொழில் அதிபர் பிரதீப் பவானி கோரிக்கை வைத்துள்ளார்.

7. ஒரு காவலர், ஒரு நண்பர் 50 வீடுகளை சுத்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். இதைப் போன்ற நடவடிக்கைகளில் நாம் எல்லோரும் ஈடுபட வேண்டும் என்றுள்ளார் கலைஞர் ரெசூல் பூக்குட்டி.

8. தற்போதைய அவசியத் தேவை, மக்கள் மீண்டும் ஒரு நிலைக்கு வர உதவ வேண்டும். உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் என்று நடிகர் ஜிம்மி ஷெர்கில் கோரிக்கை வைத்துள்ளார்.

9. உங்களால் ஒரு காபி குடிப்பதை நிறுத்திவிட்டு உதவி செய்ய முடியுமென்றால், செய்யுங்கள். வெறும் நிதியுதவி செய்வது மட்டும் போதாது என்று தொழிலதிபர் அதித்யா கோஷ் தெரிவித்துள்ளார்.

10. இன்னும் தீரமாக இருங்கள் என்று கேரள மக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நல்ல நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன. நாம் அனைவரும் கேரளாவுக்கு உதவ வேண்டும் என்று நடிகை மணிஷா கொய்ராலா கூறியுள்ளார்.

.