This Article is From Nov 11, 2018

பீகாரில் முதியவர் கொலை வழக்கு விசாரணை சத்பூஜை வரை நிறுத்தி வைப்பு!

பீகாரில் துர்கா பூஜையின் போது ஏற்பட்ட கலவரத்தில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை குறித்த விசாரணை சத்பூஜை வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதாமாரியில் கொலை செய்யப்பட்ட முதியவர் சைனுல் அன்சாரி இறப்பிற்கு காரணமான ஒருவரையும் போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.

ஹைலைட்ஸ்

  • No arrests even 3 weeks after Zainul Ansari's murder in Sitamarhi
  • Police says it will resume investigation after Chhath Puja
  • Victim's family says it has given a photo of the accused to police
Sitamarhi:

பீகார் மாநிலம் சிதாமாரியில் 82 வயது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டு மூன்று வாரங்கள் கடந்து விட்டது. இந்நிலையில், அதுதொடர்பாக போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. தற்போது இந்த கொலை குறித்த விசாரணை சத் பூஜை வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜை நல்ல முறையில் நடந்து முடிவடைய வேண்டும் அதன் பின்புதான் விசாரணையை தொடங்க முடியுமென்று போலீசார் கூறியுள்ளனர்.

அக்.20 ஆம் தேதி அடிதடி நடந்த பகுதிக்கு அருகில் முதியவர் சைனுல் அன்சாரியின் உடல் கைப்பற்றப்பட்டது. அவரது கொலைக்கு காரணமான நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சிதாமாரி காவல் ஆய்வாளர் விகாஷ் பர்மன் கூறுகையில், சத் பூஜை முடிந்த பின்பு சைனுல் அன்சாரி கொலை குறித்த விசாரணை தொடரும் என கூறியுள்ளார்.

சிதாமாரியில் கலவரம் வெடித்த மறுநாள் சைனுல் அன்சாரி தனது சகோதரியின் வீட்டிலிருந்து திரும்பிய போது கொலை செய்யப்பட்டுள்ளார். சைனுல் அன்சாரியின் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினருக்கு நான்கு நாட்களுக்கு பின்னரே தெரிய வந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இருந்தும் போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. கலவரம் தொடர்பாக 38 பேரை கைது செய்துள்ளோம் ஆனால், அதில் சைனுல் கொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படவில்லை என்று காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சைனுல் அன்சாரியின் மகன் கூறுகையில், நிர்வாகம் தன் கடமையை செய்து வருகிறது இருப்பினும் கொலையாளியை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.


 

.